full screen background image

ரஹ்மானை பிடித்துக் கொடுத்த ஹீரோ..!

ரஹ்மானை பிடித்துக் கொடுத்த ஹீரோ..!

ஏ.ஆர்.ரஹ்மான் இப்போதெல்லாம் உலகம் சுற்றும் வாலிபனாகிவிட்டார். சென்னையில் பார்ப்பதே அரிது. தமிழ்ப் படங்களை ஒத்துக் கொள்வதே அரிது. இந்த நிலைமையில் எப்படி ‘காவியத்தலைவன்’ படத்துக்கு இசையமைக்க ஒத்துக் கொண்டார்..? இந்த ரகசியத்தை இதற்கு பெரும் உதவி செய்த அப்படத்தின் நாயகன் சித்தார்த் நேற்றைய பிரஸ்மீட் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

“வசந்தபாலன் ஸார் என்கிட்ட இந்தக் கதையைச் சொல்லி இரண்டரை வருஷத்துக்கு மேல ஆச்சு. அதுக்கப்புறம் அவரோட உழைப்பு.. இதையொரு காவியம் மாதிரி வரணும்னு நினைச்சு உழைச்சிருக்கோம். நடுவுல நிறைய டவுட்டு.. வேற படத்துக்குப் போயிரலாமான்னுகூட யோசிச்சிருக்கோம்.

இந்தப் படத்துக்கு மியூஸிக்கு யாரை போடலாம்னு டிஸ்கஷன் செய்யும்போது  எனக்குள்ள ரொம்ப நாளா ஒரு ஆசை.. ரஹ்மான் ஸார் மியூஸிக் பண்ணணுமேன்னு.. டைரக்டரும் அதையேதான் சொன்னாரு.. ஸோ அவரையே அப்ரோச் செய்ய நினைச்சோம். அவரை நிறைய தடவை சந்திச்சிருக்கேன்.. சின்ன வயசுலேயே பார்த்திருக்கேன். நான் நடிச்ச 4 படங்களுக்கு அவர் மியூஸிக் போட்டிருக்கார். அப்புறம் அப்பப்போ ஏர்போர்ட்ல எங்கயாச்சும் சந்திக்கும்போது நல்லா உற்சாகப்படுத்தி பேசுவார் ரஹ்மான் ஸார். ஒரு நல்ல புராஜெக்ட் கிடைக்கும்போது சேர்ந்து பண்ணுவோம்னு சொல்லியிருந்தார். ஸோ.. சசிகாந்த் ஸார்கிட்டே சொன்னேன்.. ரஹ்மான்கிட்ட கேட்டுப் பார்ப்போம்ன்னு.. அவரும் சரின்னாரு..

ரஹ்மான் ஸாருக்கு போன் செஞ்சு ஸார் ஒரு கதை இருக்கு.. ‘கேக்குறீங்களா’ன்னேன்.. ‘சரி வாங்களேன்’னாரு. வசந்தபாலன் ஸாரை கையோடு கூட்டிட்டுப் போய் அவங்க ரெண்டு பேரையும் உள்ள ஒரு ரூம்ல உக்கார வைச்சிட்டு வெளில ஓடி வந்துட்டேன். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு உள்ள போனப்போ ரெண்டு பேருமே அமைதியா இருந்தாங்க. கதை சொல்லி முடிச்சாச்சு.. ‘சரி.. பார்க்கலாம்.. சொல்றேன்’னாரு ரஹ்மான் ஸார்.. அதுக்கப்புறம் கொஞ்ச நேரத்துல ‘கிட்டப்பா ரெடி’ன்னு சொல்லி அவர்கிட்டேயிருந்து மெஸேஜ் வந்துச்சு. அது வந்தவுடனேயே ‘காவியத்தலைவனோட’ கலரே மாறியிருச்சு. நாங்களே ஆஸ்கர் லெவலுக்கு எங்களை நினைச்சுக்கிட்டோம்..” என்றார்.

படம் வரட்டும் சித்தார்த் ஸார்.. நாங்களும் சேர்ந்து மாத்திர்றோம்..!

Our Score