தெலுங்கு பத்திரிகையொன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்திருக்கும் டாப்ஸி இந்திய சினிமாக்களில் ஹீரோயின்களுக்கு காட்டும் பாகுபாட்டை சற்று காட்டமாக விமர்சித்திருக்கிறார்.
“இங்க ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆனாலோ.. அவர்கள் 30, 40 வயசைக் கடந்தாலே ஹீரோயின் வாய்ப்பு தராமல் ஓரம் கட்டி விடுகிறார்கள். ஆனால், ஹாலிவுட்டில் 40, 50 வயதிலும் ரொமான்டிக் காட்சிகளில் அங்குள்ள நடிகைகள் நடிக்கிறார்கள். இது இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய சாபக்கேடு. திருமணமான பின் ஒரு நடிகையால் காதல் காட்சிகளில் நடிக்க முடியாதா.. என்ன…?
கல்யாணத்துக்குப் பின்னாடி முத்தக் காட்சியில் நடிப்பது என்பது அந்தந்த நடிகைகளின் தனிப்பட்ட விஷயம். அதற்காக அவர்களுக்கு அக்கா இல்லாட்டி அண்ணி வேடமோதான் கொடுப்போம்னு சொல்றது தப்பு..
எனக்குக் கல்யாணமானாலும் அதுக்கு பின்னாடியும் கண்டிப்பா நடிப்பேன்.. முதல்ல, கல்யாணத்துக்கு பின்னாடி நடிப்பதை நிறுத்திரலாம்னுதான் நினைச்சிருந்தேன்.. ஆனா, இப்போது எனது எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.. எனது கடைசி மூச்சு உள்ளவரை நடிச்சுக்கிட்டேதான் இருப்பேன்…” என்று பொரிந்து தள்ளியிருக்கிறார் டாப்ஸி.