full screen background image

‘மின்னல் முரளி’ ஸ்டைலில் உருவாகும் ‘SUPER BE MAN’ திரைப்படம்!

‘மின்னல் முரளி’ ஸ்டைலில் உருவாகும் ‘SUPER BE MAN’ திரைப்படம்!

மின்னல் முரளி’, ‘லோகோ’ படங்கள் வரிசையில் பரபர ஃபேண்டஸி த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘சூப்பர் பி மேன்’ படத்தின் முதல் பார்வை வெளியீடு!

இதுவரை கண்டிராத திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் வகையில் ஃபேண்டஸி சூப்பர் ஹீரோ சர்வைவல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘சூப்பர் பி மேன்’.

புதிய சிந்தனைகளுடன் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்படும் ஆம்பிஷியஸ் புரொடக்‌ஷன் ஹவுஸ் தொடர்ந்து புதுமையான கதைகளை உருவாக்கி நம்பி்க்கைக்குரிய நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

அந்த வகையில், தனது இரண்டாவது படைப்பான ’சூப்பர் பி மேன்’ திரைப்படத்தின் மூலம் இதுவரை காணாத திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு தரவுள்ளது.

இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ’3.33’ கதைக் களம் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் மற்றும் சைக்கலாஜிக்கல் அம்சங்களுடன் இருந்தது.

அதனைத் தொடர்ந்து, இப்போது ’சூப்பர் பி மேன்’ மூலம் ஃபேண்டஸி, சூப்பர் ஹீரோ மற்றும் சர்வைவல் திரில்லர் அம்சங்களுடன் பிரம்மாண்ட களத்திற்குள் நுழைந்துள்ளது.

‘சூப்பர் பி மேன்’ திரைப்படத்தின் முதல் பார்வை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஃபேண்டஸி உலகத்தையும் அதிரடி சர்வைவல் கதையையும் இணைக்கும் இதன் கிளிம்ப்ஸ் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

டி. ஜீவிதா கிஷோர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், ’3.33’ திரைப்படத்தின் இயக்குநரான நம்பிக்கை சந்துரு கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் அவர் சூப்பர் ஹீரோவாக மாறுவது படத்தின் ஹைலைட் தருணங்களில் ஒன்று.

படத்தின் மற்ற நடிகர்கள், குறிப்பாக நாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

படத்தில் உயர்தர தொழில் நுட்பக் குழு பணியாற்றுகிறது.

’பிந்தம்’, ’3.33’, ’மாங்கோ முனி’ மற்றும் வரவிருக்கும் இந்தி படத்தில் பணியாற்றிய சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவை கையாண்டு்ள்ளார்.

’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ’அர்ஜுன் ரெட்டி’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஹர்ஷவர்தன் படத்திற்கு இசையமைக்கிறார். ‘அனிமல்’ படத்திற்காக அவர் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

’3.33’, ’சிவகுமாரின் சபதம்’ மற்றும் வரவிருக்கும் ’பிளெடி பாலிடிக்ஸ்’ படங்களில் பணியாற்றிய தீபக் எஸ் எடிட்டிங்கை மேற்கொள்கிறார்.

‘அன்னபூரணி’ மற்றும் பல மலையாள படங்களில் பணியாற்றிய சுகன் சண்டைப் பயிற்சியை கவனிக்கிறார்.

காஸ்ட்யூம் டிசைனை ’லோகா’, ’மின்னல் முரளி’ படங்களில் பணியாற்றிய மெல்வி ஜே மேற்கொள்கிறார்.

ஒலி வடிவமைப்பை ’அனிமல்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சச்சின் சுதாகரன் கவனிக்கிறார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் டி. ஜீவிதா கிஷோர் கூறுகையில், ”ஃபேண்டஸி மற்றும் சர்வைவல் கலந்த சுவாரஸ்ய கதைதான் ‘சூப்பர் பி மேன்’. நிஜத்தன்மை கொண்ட சூப்பர் ஹீரோ கதையாகவும் அதேசமயம் விஷூவலாக ரசிகர்களுக்கும் புது அனுபவம் தரவேண்டும் என்ற நோக்கத்துடனும் இந்தக் கதையை உருவாக்கியுள்ளோம்.

புதிய நடிகர்கள் மற்றும் வலுவான தொழில் நுட்பக் குழுவுடன், தமிழ் சினிமாவில் இதுவரை காணாத ஒரு உலகத்தை உருவாக்கி வருகிறோம்.

இந்தக் கதையின் உலகத்தை முதல் பார்வை மூலம் அறிமுகப்படுத்தியுள்ளோம். படத்தில் இருந்து இன்னும் பல சுவாரஸ்யமான அப்டேட் அடுத்தடுத்து வரவிருக்கிறது” என்றார்.

புதிய ஜானர், திறமையான நடிகர்கள் மற்றும் வலுவான தொழில் நுட்பக் குழுவுடன், ’சூப்பர் பி மேன்’ தமிழ் ரசிகர்களுக்கு நியூ ஏஜ் சூப்பர் ஹீரோ அனுபவத்தை தர இருக்கிறது.

படத்தின் முதல் பார்வை வெளியீடு இந்த சுவாரஸ்யமான பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது. படத்தில் இருந்து மேலும் பல அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில் நுட்பக் குழு விவரம்:

பேனர்: பேம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன்ஸ்,

இயக்குநர்: டி. ஜீவிதா கிஷோர்,

ஒளிப்பதிவாளர்: சதீஷ் மனோகரன்,

இசையமைப்பாளர்:ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்,

எடிட்டர்: தீபக். எஸ்,

ஸ்டண்ட் மாஸ்டர்: சுகன்,

காஸ்ட்யூம் டிசைனர்: மெல்வி. ஜே,

ஒலி வடிவமைப்பு: சச்சின் சுதாகரன்,

பத்திரிக்கை தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் எஸ் நாசர்.

“Super B Man ” First Look Unveiled – An Enthralling Fantasy on Lines of Minnal Murali and Lokah.

A Fantasy Superhero Survival Thriller Set to Redefine Theatrical Experience.

Ambitious production houses with a vision for innovation continue to push Tamil cinema to the next level with fresh and compelling storytelling. Emerging as one such promising banner, Bamboo Trees Productions is now set to offer a never-before theatrical experience with their second venture, “SUPER B MAN”.

Following their debut production 3.33, a unique supernatural thriller that blended horror with psychological elements, the banner now steps into an exciting new space with “SUPER B MAN”, a fantasy superhero survival thriller that promises scale, intensity, and a completely fresh cinematic experience.

The makers have officially unveiled the first look of SUPER B MAN today, offering a glimpse into a world that blends fantasy with high-stakes survival drama, instantly sparking curiosity among audiences.

Directed by T. JEEVITHA KISHORE, the film features Nambikkai Chandru (director of 3.33) in the lead role, marking a significant shift as he takes on the mantle of a superhero in this ambitious project. The rest of the cast, including the female lead and key characters, will be announced soon.

Backed by a highly accomplished technical team, SUPER B MAN brings together talents from across industries. Cinematography is handled by Sathish Manoharan, known for works including Pindam, 3.33, Mango Muni, and an upcoming Hindi project. Music is composed by Harshavardhan, associated with notable films like Kannum Kannum Kollaiyadithaal, Arjun Reddy, and a National Award for winner for Animal movie.


Editing is by Deepak S, known for 3.33, Sivakumarin Sabadham, and the upcoming Bloody Politics. Stunts are choreographed by Sugan, who has worked on projects including Annapoorani and several Malayalam films. Costume Design is by MELWY J, recognized for work in Lokah and Minnal Murali. Sound Design is handled by Sachin Sudhakaran, a National Award winner for Animal.

Sharing his thoughts, Director T. JEEVITHA KISHORE says, “SUPER B MAN’’ is a story that blends fantasy with survival in a very grounded and engaging way. We wanted to create a superhero film that feels rooted yet visually exciting. With a fresh cast and a strong technical team, we are building a world that audiences haven’t experienced before in Tamil cinema. The first look is just a small step into this universe, there’s much more to come.”

With a unique genre, fresh casting, and a strong creative team, SUPER B MAN stands as an ambitious attempt to bring a new-age superhero experience to Tamil audiences. The unveiling of the first look marks the beginning of an exciting journey, with more updates expected soon.

Technical Crew

Banner – Bamboo Trees Productions

Director – T.Jeevitha Kishore

Cinematographer – Sathish Manoharan

Music Director – Harshavardhan Rameshwar

Editor – Deepak S

Stunt Master – Sugan

Costume Designer – MELWY J

Sound Designer – Sachin Sudhakaran

PRO – Suresh Chandra-Abdul S Nassar

Our Score