இவருடைய படத்தில் நடிக்க மாட்டோமா என்று இந்தியாவின் தலைசிறந்த நட்சத்திரங்கள் காத்திருக்கும் நிலையில் ‘மாட்டேன்’ என்று தலையை ஆட்டியிருக்கிறார் ஒரு பாலிவுட் நடிகை. அவர் சோனாக்சி சின்ஹா. மறுக்கப்பட்ட இயக்குநர் மணிரத்னம்..
தன்னுடைய ‘ராவணன்’, ‘கடல்’ படங்கள் பெரிதாகப் போகாத காரணத்தினால் அடுத்து ஒரு ஹிட்டை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மணி. இதற்காக தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படத்தை இயக்கவுள்ளார்.
தெலுங்கில் மகேஷ்பாபுவும், நாகார்ஜூனாவும் நடிக்கிறார்களாம். இதில் ஹீரோயின்கள் மூன்று பேர். ஐஸ்வர்யாராய் பச்சன், மற்றும் ஸ்ருதி ஹாசனை ஒப்பந்தம் செய்துவிட்ட மணிரத்னம் 3-வது ஹீரோயினுக்காக பாலிவுட்டின் இப்போதைய சூப்பர் பிகர், சோனாக்சி சின்ஹாவை அணுகியிருக்கிறார்.
சோனாக்சி பிரபல பாலிவுட் ஸ்டைல் மன்னன் சத்ருகன் சின்ஹாவின் மகள் என்பதால் அவரிடமே கதையைச் சொல்லி கால்ஷீட் கேட்டிருக்கிறார். ஆனால் மணிரத்னம் கேட்ட தேதிகளில் சோனாக்சியின் தேதிகள் இல்லை என்று சொல்லி வாய்ப்பை நிராகரித்திருக்கிறார்கள்..
“மணி சொன்ன கதையும், சோனாக்சியின் கதாபாத்திரமும் அவருக்கும், எனக்கும் மிகவும் பிடித்திருக்கிறது.. ஆனாலும் தேதிகள் ஒத்து வராததால் அவளால் நடிக்க முடியவில்லை. ஆனால் நிச்சயமாக எதிர்காலத்தில் மணிரத்னத்தின் இயக்கத்தில் சோனாக்சி நடிப்பாள்..” என்று மகள் சார்பில் பேட்டியளித்திருக்கிறார் சத்ருகன் சின்ஹா..!
சோனாக்சியின் இந்த பதில், நிச்சயமாக இந்திய சினிமாவில் ஒரு அதிசயம்தான்..!