full screen background image

மஞ்சுவாரியர்-திலீப் விவாகரத்து உறுதியானது..!

மஞ்சுவாரியர்-திலீப் விவாகரத்து உறுதியானது..!

மலையாள சினிமா ரசிகர்களுக்கு இன்றைக்கு ராத்திரிக்கு உறக்கம் வர இல்லா.. காரணம் மஞ்சுவாரியார்-திலீப் விவாகரத்து உறுதியானதுதான்..!

5 படங்களில் ஜோடியாக நடித்ததில் இருந்து காதலிக்கத் துவங்கிய இந்த ஜோடி.. 1998-ம் ஆண்டு திடீரென்று மணமுடித்துக் கொண்டார்கள்.. மஞ்சுவாரியர், ஊர்வசிக்கு பிறகு மலையாளத்தில் எந்த கேரக்டருக்கும் பொருந்தக் கூடிய நடிகை என்று பெயர் எடுத்தவர். நடிக்க வந்து 5 ஆண்டுகளில் நடிப்பை மூட்டை கட்டுவார் என்று மலையாள திரையுலகமே நம்ப முடியவில்லை. ஆனால் அதுதான் நடந்தது..!

மீனாட்சி என்ற பெண் குழந்தை பிறந்த பிறகு மஞ்சு நடிக்கவேயில்லை. மகள் மீனாட்சி இன்றைக்கு 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். அமைதியாக இருந்த அவர்களது வாழ்க்கையில் கடந்த ஆண்டுதான் இந்த கிசுகிசு பரவியது. இருவரும் பிரிந்துவிட்டதாகவும், டைவர்ஸ் செய்யப் போவதாகவும் செய்திகள் பரவின.

மஞ்சு வாரியர் மீண்டும் நடிக்க விரும்பி திலீப் அதற்கு தடை போட்டதுதான் இதற்கு முக்கியக் காரணம் என்றார்கள்.. இன்னொரு பக்கம் திலீப், மஞ்சுவாரியர் வாழ்க்கையின் இடையே நடிகை காவ்யா மாதவன் வந்ததுதான் காரணம் என்றார்கள். காவ்யா மாதவனோ இதனை முற்றிலும் மறுத்துவிட்டார். மஞ்சு தன்னுடைய பெஸ்ட் பிரண்ட் என்றும், தான் ஒருநாளும் அப்படி நினைக்கவில்லை என்றார். இதனாலேயே திலீப் சமீப காலமாக காவ்யா மாதவனுடன் ஜோடி சேருவதைத் தவிர்த்திருந்தார். அப்படியிருந்தும் 3 நாட்களுக்கு முன்னால் நடந்த மீரா ஜாஸ்மினின் திருமணத்தில் காவ்யாவுடன், திலீப்பும் கலந்து கொண்டது அங்கே கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது..!

திலீப்பை பிரிந்து திருச்சூரில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கே வந்துவிட்ட மஞ்சு, கேரளாவில் பல ஊர்களில் தனது நாட்டிய கச்சேரிகளை தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார். கூடவே தனது பெயரையும் ‘மஞ்சு கோபாலகிருஷ்ணன்’ என்பதில் இருந்து மீண்டும் பழையபடி ‘மஞ்சு வாரியர்’ என்றே மாற்றிக் கொண்டார். இருந்தும் இந்த ஒரு வருடமாக எந்தவொரு பத்திரிகையிலும், இந்த விஷயம் பற்றி இருவருமே மூச்சுவிடவில்லை..!

திலீப் படங்களில் நடித்துக் கொண்டிருக்க… மஞ்சுவாரியர் இன்னொரு பக்கம் விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அமிதாப்பச்சன், பிரபு, ஐஸ்வர்யா ராயுடன் கல்யாண் ஜூவல்லர்ஸ் விளம்பரத்தில் அசத்திக் கொண்டிருக்கிறார்..  

பிரிந்திருந்து ஒரு ஆண்டு ஆகிவிட்டதால் இன்றைக்கு திருச்சூர் பேமிலி கோர்ட்டில் மனமொப்பிய விவகாரத்து கோரி திலீப் -மஞ்சு இருவரும் மனு தாக்கல் செய்துவிட்டார்களாம்.. திலீப் தனது மகள் மீனாட்சியை தானே வளர்ப்பதாக கூற, இதற்கு மஞ்சுவும் ஒத்துக் கொண்டுவிட்டாராம்.. மீனாட்சிக்கும் இது ஓகேதானாம்.. மஞ்சு தன் மகளை அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்ளலாமாம்.. சொத்துப் பிரிவினை மட்டுமே இனிமேல் நடக்கவுள்ளதாகத் தகவல்.. விவாகரத்து சட்டத்தின் அடுத்தக் கட்டத்தின்படி இருவருக்கும் கவுன்சிலிங் வரும்படி சம்பிரதாயமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.. எப்படியிருந்தாலும் விவாகரத்து உறுதி என்பது தெளிவாகத் தெரிகிறது..

மஞ்சுவாரியர் இப்போது மீண்டும் படங்களில் நடிப்பதற்குத் தயாராகிவிட்டார். ரோஷன் ஆண்ட்ரூஸின் அடுத்த படத்தில் மஞ்சுதான் ஹீரோயினாம்.. படத்தின் பெயர் How old are you..

பொருத்தமாத்தான் இருக்கு..!

Our Score