full screen background image

நடிகர் சரத்குமாரின் கதைக்கு, ராஜேஷ்குமார் திரைக்கதை அமைக்கும் ‘சண்டமாருதம்’..!

நடிகர் சரத்குமாரின் கதைக்கு, ராஜேஷ்குமார் திரைக்கதை அமைக்கும் ‘சண்டமாருதம்’..!

‘சென்னையில் ஒரு நாள்’, ‘புலிவால்’ போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் தற்போது சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் ‘சண்டமாருதம்’ என்ற படத்தை தயாரித்து கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் கதாநாயகிகளாக ஓவியா, மீரா நந்தன் இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்கிறார்.

மற்றும் விஜயகுமார், ராதாரவி, இமான் அண்ணாச்சி, நரேஷ், தம்பி ராமையா, வெண்ணிற ஆடை மூர்த்தி, சிங்கம் புலி, ‘காதல்’ தண்டபாணி, நளினி, டெல்லி கணேஷ் , மோகன்ராம், ஜி.எம்.குமார், சந்தானபாரதி, ரேகா சுரேஷ், வின்சென்ட் அசோகன், ‘கானா’ உலகநாதன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சரத்குமார் கதை எழுத, திரைக்கதை எழுதுகிறார் கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார்.

ஒளிப்பதிவு – N.S.உதய்குமார்

இசை – ஜேம்ஸ் வசந்தன்

பாடல்கள் – மோகன்ராஜ், சுமதிஸ்ரீ

எடிட்டிங் – V.T. விஜயன்

கலை – ரூபேஷ்

ஸ்டண்ட் – ஸ்டண்ட் சிவா

நடனம் – கல்யாண், விஷ்ணு தேவா

தலைமை செயல் அதிகாரி – பா..சக்திவேல்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு – A.N.சுந்தரேசன்

தயாரிப்பு மேற்பார்வை – வினோத் சபரீசன்

தயாரிப்பு – R.சரத்குமார், திருமதி ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன்.

வசனம் இயக்கம் – A.வெங்கடேஷ் .

படம் பற்றி இயக்குனர் A.வெங்கடேஷிடம் கேட்டோம்….

“சண்டமாருதம்’ ஆக்சன் கலந்த படம். இப்படத்திற்காக சமீபத்தில் பெரம்பூர் பின்னி மில்லில் பிரமாண்டமான கண்ணாடி அரங்கு ஒன்று அமைக்கப்பட்டது. பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அந்த அரங்கில் ஹீரோ சரத்குமாரும் வில்லன் சர்வேஸ்வரன் என்ற வேடத்தில் நடிக்கும் சரத்குமாரும் மோதும் சண்டைக் காட்சி ஒன்று பரபரப்பாகப் படமாக்கப்பட்டது.

ஐந்து காமிராக்களி்ன மூலம் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்பட சண்டை கலைஞர்கள் மற்றும், பாங்காக்கிலிருந்து வந்திருந்த நான்கு சண்டை கலைஞர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர். இந்த சண்டை காட்சி பத்து நாட்கள் படமாக்கப்பட்டது. இதில் ஹீரோயின்கள் ஓவியா, மீராநந்தன் ஆகியோரும் பங்கு பெற்றனர். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இசை சேர்ப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இசை வெளியீடு நடைபெற உள்ளது..” என்றார் இயக்குனர் A.வெங்கடேஷ்.

Our Score