full screen background image

கொடைக்கானலில் படமான விக்ரம் பிரபு-ஸ்ரீதிவ்யா முதலிரவு காட்சி..!

கொடைக்கானலில் படமான விக்ரம் பிரபு-ஸ்ரீதிவ்யா முதலிரவு காட்சி..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ள அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படம் ‘வெள்ளக்கார துரை.’

இதில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். மற்றும் சூரி, ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ‘ஆடுகளம்’ நரேன், சிங்கம் புலி, மதன்பாப், சிங்கமுத்து, பாவா லட்சுமணன், விட்டல் , வி.ஞானவேல், ‘மகாநதி’ சங்கர், டாடி சரவணன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், வனிதா, மதுமிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

வசனம் – எழிச்சூர் அரவிந்தன்

ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி

பாடல்கள் – வைரமுத்து, யுகபாரதி

இசை – D.இமான்

கலை – ரெமியன்

நடனம் – தினேஷ், தினா

ஸ்டண்ட் – திலீப் சுப்பராயன்

எடிட்டிங் – கிஷோர்.

தயாரிப்பு நிர்வாகம் – ஜெயராஜ், ரஞ்சித்

தயாரிப்பு மேற்பார்வை – சங்கர்தாஸ்

இணை இயக்கம் – பாலகணேசன்

தயாரிப்பு – அன்பு செழியன்

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் எஸ்.எழில்.

படம் பற்றி இயக்குனர் எழிலிடம் பேசினோம்.

“இந்த ‘வெள்ளக்கார துரை’ படத்திற்காக சமீபத்தில் கொடைக்கானலில் விக்ரம் பிரபு – ஸ்ரீதிவ்யா பங்கேற்ற முதலிரவு பாடல் காட்சி ஒன்றை வீடு ஒன்றில் படமாக்கினோம். ‘கூதக் காத்து கொல்லுதடி – கூரச் சேல தாடி’ என்ற முதலிரவு பாடல் அது. முதலிரவு பாடல்தான் என்றாலும் விரசமே இல்லாமல் எல்லோரும் குடும்பத்தாருடன் பார்க்கக் கூடிய பாடலாக உருவாக்கி உள்ளோம். நான் இயக்கிய இதற்கு முந்தைய படங்களிலும் ஆபாசமான காட்சிகள் எதுவுமே இருக்காது. அது மாதிரிதான் இதிலும்..ஜாலியான படமாக இந்த ‘வெள்ளக்கார துரை’ இருக்கும்..” என்றார்.

தயாரிப்பாளர் அன்பு செழியன் பேசும்போது, “ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்துள்ள நான் முதன் முதலாக தயாரிக்கும் படம் இது. நான் எதிர்பார்த்த மாதிரியே தரமான கமர்ஷியல் படமாக வந்திருக்கிறது. படத்தை பார்த்து விட்டேன். எனக்கு முழு திருப்தியாக உள்ளது..” என்றார்.

Our Score