‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ மாதிரியான ஜாலியான படம் ‘ரோமியோ ஜூலியட்’..!

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ மாதிரியான ஜாலியான படம் ‘ரோமியோ ஜூலியட்’..!

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ‘ரோமியோ ஜூலியட்.’ இதில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி-பூனம் பாஜ்வா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் வம்சி கிருஷ்ணா, கணேஷ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.

வசனம் – சந்துரு

பாடல்கள் – மதன்கார்க்கி, தாமரை

இசை – D.இமான்

கலை – மிலன்

நடனம் – ஷெரீப்

ஸ்டண்ட் – திலீப் சுப்பராயன்

எடிட்டிங் – ஆண்டனி

தயாரிப்பு நிர்வாகம் – ரமணா , A.K.கார்த்திக்

தயாரிப்பு மேற்பார்வை – K.K.ரவி

தயாரிப்பு வடிவமைப்பு – A.K.சேகர்

தயாரிப்பு – எஸ். நந்தகோபால்

கதை, திரைக்கதை, இயக்கம் – லட்சுமண்

படம் பற்றி இயக்குநர் லட்சுமணிடம் கேட்டோம்..

“ரோமியோ ஜூலியட்’ படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இப்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஜெயம்ரவி – ஹன்சிகா பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

படு ஜாலியான இளமை துள்ளல் படமாக ரோமியோ ஜூலியட் உருவாகிறது. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ மாதிரியான காமெடி இதில் இருக்கிறது. இமானின் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் இனிமையாக உள்ளன. இந்த பாடல்கள் மூலம் இமானுக்கு ஹிந்தி திரையுலகில் நுழையும் வாய்ப்புள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது..” என்றார் இயக்குனர் லட்சுமண்.

Our Score