விமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கும் ‘சண்டக்காரி-The பாஸ்’

விமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கும் ‘சண்டக்காரி-The பாஸ்’

பாஸ் புரொடக்‌ஷன்ஸ் கார்ப்பரேசன்   & மெட்ரோ நெட் மல்டி மீடியா பட நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர் J.ஜெயகுமார் மிகப் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கும் திரைப்படம் ‘சண்டக்காரி-The Boss.’

இந்தப் படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரேயா நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் பிரபு, சத்யன்,  மற்றும் கே.ஆர்.விஜயா, ரேகா, கிரேன் மனோகர், ‘மகாநதி’ சங்கர், உமா பத்மநாபன் மற்றும் பல முன்னனி நடிகர் நடிகைகள்  நடிக்கின்றனர். சூப்பர் ஹிட்டான ‘மகதீரா’ படத்தில் வில்லனாக நடித்த தேவேந்தர் சிங் கில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு - குருதேவ், இசை – அம்ரீஷ், பாடல்கள் – கபிலன், விவேக், படத் தொகுப்பு – தினேஷ், கலை இயக்கம் – அய்யப்பன், நடன இயக்கம் – அபீப், சண்டை இயக்கம் - கனல் கண்ணன், திரைக்கதை, இயக்கம் – ஆர்.மாதேஷ்.

மலையாளத்தில் திலீப், மம்தா மோகன் தாஸ் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற ‘மை பாஸ்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்குதான் இத்திரைப்படம்.

‘திரிஷ்யம்’ எப்படி சூப்பர் ஹிட் அடித்ததோ அது மாதிரி ‘மை பாஸ்’ கேரளாவில் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த படம்.

image (8)

இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நியூயார்க், வெனிஸ், லண்டன் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது. மற்றும் கொச்சின், கோவா, காரைக்குடி போன்ற இடங்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

படம் பற்றி இயக்குநர்  மாதேஷ் பேசுகையில்,  “இதுவொரு வித்தியாசமான ஆக்‌ஷன் கலந்த காமெடி படம். முழுக்க, முழுக்க குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் இந்தப் படம் உருவாகி வருகிறது. பெரும்பகுதி வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது கேரளாவில் பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.." என்றார்.