ஏகலைவன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘இருளன்’.
இப்படத்தில் நாயகர்களாக ஸ்ரீகாந்த், பிரபு, அர்த்திஃப், ரோஹன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
யு.ஹர்ஷவர்த்தனா இசையமைத்து ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யா பிரபு எழுதி இயக்குகிறார்.
ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் செய்த பாவத்திற்கு நிச்சயமாக தண்டனை உண்டு. இதை மனதில் கொண்டு இக்கால இளைஞர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவதாக இப்படத்தின் கதை அமைந்திருக்கிறதாம்.
நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பாவத்தைச் செய்துவிட, அந்தப் பாவத்தை செய்தமைக்காக அவர்களுக்குக் கிடைக்கும் ஒரே தண்டனை மரணம்தான் என்பதை திரைக்கதையில் சொல்லியிருக்கிறார்கள்.
நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். படக் குழுவினர் அனைவருமே இளைஞர்கள் என்பதால் அவர்களுக்கே உரிய துடிப்புடன் பணியாற்றியிருக்கிறார்கள். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் பாலாஜி மோகன் இன்று வெளியிட்டார்.









