full screen background image

விமலின் 35-வது திரைப்படம் ‘பெல்லடோனா’ 16 மொழிகளில் உருவாகிறது!

விமலின் 35-வது திரைப்படம் ‘பெல்லடோனா’ 16 மொழிகளில் உருவாகிறது!

தனித்துவமான திரைப்படங்கள் மூலம் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் விமலின் 35-வது படமாக ‘பெல்லடோனா’ யூபோரியா பிலிக்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரைப்படம் உருவாகி வருகிறது.

தேஜஸ்வினி ஷர்மா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக மணிப்பூரை சேர்ந்த மேக்சினா பவ்னம் நடிக்கிறார். 

வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்ய, ஏசி ஜான் பீட்டர் இப்படத்திற்கு இசையமைக்கிறார், தீபக் எடிட்டிங் செய்கிறார். அனைத்து பாடல்களையும் இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமியே எழுதி இருக்கிறார் சண்டைக் காட்சிகளை டேஞ்சர் மணி கையாண்டுள்ளார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமி கூறுகையில், “இந்தப் படம் விமல் சாருக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும். மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு நன்றாக வந்துள்ளது. இந்தக் கதைக்கு ஏற்றார் போல் சக நடிகர்களும் அமைந்துள்ளனர். கேமராமேன், எடிட்டர், மியூசிக் டைரக்டர் என அனைவரும் மிக பக்கபலமாக இருந்து உழைத்து வருகின்றனர்” என்றார்.

இந்த ‘பெல்லடோனா’ தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மணிப்புரி உள்ளிட்ட 16 மொழிகளில் வெளியாக உள்ளது.

இதுவரை இல்லாத வகையில் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த படம் இருக்கும் என்று படக் குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் இந்த ‘பெல்லடோனா’ திரைப்படத்தின் இதர விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Our Score