‘மிர்ச்சி’ சிவா, யோகி பாபு நடிப்பில் முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகும் ‘சலூன்’

‘மிர்ச்சி’ சிவா, யோகி பாபு நடிப்பில் முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகும் ‘சலூன்’

‘குற்றம்-23’, ‘தடம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து தயாரிப்பாளர் இந்தர்குமாரின் ரெதான் – தி சினிமா பீப்பிள் தயாரித்துள்ள படம் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இதனைத் தொடர்ந்து கதாநாயகனாக சிவா – காமெடியனாக யோகி பாபு நடிப்பில் ‘தர்ம பிரபு’ வெற்றிப் படத்தை இயக்கிய முத்துக்குமரன் இயக்கத்தில் புதிய நகைச்சுவை படத்தை மிகப் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கிறார் தயாரிப்பாளர் இந்தர்குமார்.

‘சலூன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் சிவா – யோகி பாபு இணைந்து நடிக்க கதாநாயகி மற்றும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

தயாரிப்பு – இந்தர்குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – முத்துக்குமரன், ஒளிப்பதிவு – எஸ்.மணிகண்டன், இசை – சாம்.சி.எஸ், படத் தொகுப்பு – சான் லோகேஷ், கலை இயக்கம் – சி.எஸ்.பாலசந்தர், பாடல்கள் – யுகபாரதி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

‘சலூன்’ கடையின் முதலாளியாக சிவா, தொழிலாளியாக யோகி பாபுவும் நடிக்கின்றனர்.

முழுக்க, முழுக்க சரவெடி நகைச்சுவையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு 2021 ஜனவரியில் துவங்கி கோடை விடுமுறையில் வெளிவருகிறது.