இறுதிக் கட்டத்திற்கு வந்தது ‘அக்னி சிறகுகள்’ திரைப்படம்..!

இறுதிக் கட்டத்திற்கு வந்தது ‘அக்னி சிறகுகள்’ திரைப்படம்..!

அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் T.சிவா தயாரித்துள்ள திரைப்படம் ‘அக்னி சிறகுகள்’.

மல்டி ஸ்டார் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன், சம்பத், J.சதீஷ்குமார், ரைமா, சேனா, சென்ட்ராயன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள்.  

நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். K.S.பாச்சா ஒளிப்பதிவு செய்ய, வெற்றிவேலன்.K படத் தொகுப்பு செய்துள்ளார். கிஷோர் கலை இயக்கம் செய்ய, மகேஷ் மேத்யூ சண்டைப் பயிற்சியை அமைத்துள்ளார். பரஞ்சோதி எக்சிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்ற, சௌபர்னிகா உடை வடிவமைப்பு செய்துள்ளார்.

தற்போது முழுப் படப்பிடிப்பும் முடிந்ததில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது படக் குழு.

பர பர திரில்லராக, பல அதிரடி ஆக்சன் காட்சிகளுடன், மிகப் பெரிய பட்ஜெட்டில், இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத வித்தியாசமான பல நாடுகளில் இத்திரைப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி, இயக்குநர் நவீன், நடிகை அக்‌ஷரா ஹாசன் மற்றும் ‘அக்னி சிறகுகள்’ படத்தின்  மொத்தப் படக் குழுவும் கொல்கத்தாவின் சூழலை கொண்டாடி எடுத்துக் கொண்ட செல்ஃபி சமீபத்தில் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

இயக்குநர் நவீன் இது குறித்து பேசும்போது,உலகம் முழுவதும் சென்று படப்பிடிப்பு  செய்வது என்பதே தற்போது மிகவும் நெருக்கடியான சூழலாக இருந்து வருகிறது. படக் குழுவின் அயராத ஒத்துழைப்பே  அனைவரும் இணைந்து இயங்குவதற்கு பெரும் ஊக்கமாக இருந்தது.

இந்த அக்னி சிறகுகள்’ படத்திற்கு இப்படியானதொரு படக் குழு கிடைத்திருப்பதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். படத்தின் மிக முக்கியமான காட்சிகள் சிலவற்றை கொல்கத்தாவில் தற்போது படமாக்கினோம். இத்துடன் படத்தின் முழுப் டப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது.

விஜய் ஆண்டனி மற்றும் அக்‌ஷரா ஹாசன் இருவரும் காட்சிகளில் வெளிப்படுத்திய அற்புத நடிப்பில் அசந்து போனேன். படத்தின் மொத்த படபிடிப்புமே பேரனுபவமாக இருந்தது.

படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது உடனடியாக போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் துவக்கப்பட்டு விட்டது.

இந்நேரத்தில் படக் குழு அனைவருக்கும் தேவையான  பாதுகாப்பு  மற்றும் உடல் நலம் பேணும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைத்து தந்ததற்காக தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா அவர்களுக்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்…” என்றார்.

Our Score