‘ராஜவம்சம்’ படத்தை இயக்கிய கே.வி. கதிர்வேலு இயக்கத்தில், சாம் சி.எஸ். இசையமைப்பில் உருவாகியுள்ள நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகள் நிறைந்த திரைப்படம் ‘சிங்காரம்’.
ராக் புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் ஏ.எஸ்.ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி இணைந்து தயாரித்துள்ள இப்படம், வரும் அக்டோபர் 30, 2026 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் யோகி பாபு, இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
அவருடன் வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், மரியா வின்சென்ட், சார்ம்ஸ், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, மாரிமுத்து, படவா கோபி, சென்ட்ராயன், டி.எஸ்.ஆர்., தீபா சங்கர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம். கணேஷ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தில், நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த யோகிபாபு, தனக்கு எதிராக நிலவும் அடக்குமுறைகளையும் வாழ்க்கைச் சவால்களையும் எதிர்கொண்டு, தனது வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கும் துணிச்சலைப் பெறுவதே இப்படத்தின் மையக் கருவாக அமைந்துள்ளது.
தனது உரிமையையும், சுயமரியாதையையும் நிலைநாட்டப் போராடும் ஒரு மனிதனின் பயணத்தை, நகைச்சுவையும் உணர்வுபூர்வமான தருணங்களும் இணைந்த திரைக்கதையின் வழியாக இப்படம் எடுத்துரைக்கிறது.
அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவற்றைக் கடந்து முன்னேறுவதற்கான மன உறுதியையும் மையப்படுத்தி, பொழுதுபோக்குடன் கூடிய கருத்தையும் பார்வையாளர்களுக்கு வழங்கும் வகையில் இந்த ‘சிங்காரம்’ படம் உருவாகியுள்ளது.
‘ராஜவம்சம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கே.வி.கதிர்வேலு, இப்படத்தை இயக்கியுள்ளார்.
யோகி பாபுவுடன் அனுபவமிக்க நடிகர்கள் இணைந்திருப்பது படத்தின் சிறப்பம்சமாகும்.
நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் மன உறுதி ஆகிய அம்சங்களை ஒருங்கிணைத்து, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத் தொகுப்பையும், குருராஜ் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.
அனுபவம்மிக்க தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகியுள்ள இந்த ‘சிங்காரம்’, படம் நகைச்சுவையும், உணர்வுகளும் நிறைந்த ஒரு சுவாரஸ்யமான திரையரங்க அனுபவத்தை வழங்கத் தயாராகி வருகிறது.
நடிகர்கள் :
யோகி பாபு, வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், மரியா வின்சென்ட், சார்ம்ஸ், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, மாரிமுத்து, படவா கோபி, சென்ட்ராயன், டி.எஸ்.ஆர்., தீபா சங்கர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம். கணேஷ்கர் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:
இயக்கம் : கே.வி. கதிர்வேலு
தயாரிப்பாளர்கள்:ஏ.எஸ். ரமண பாலாஜி, பத்மாவதி காந்தி
தயாரிப்பு நிறுவனம்: ராக் புரொடக்ஷன்
இசை: சாம் சி.எஸ்.
ஒளிப்பதிவு: பிரசன்னா எஸ். குமார்
படத்தொகுப்பு: லாரன்ஸ் கிஷோர்
கலை இயக்கம்: குருராஜ்
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்.
Yogi Babu’s ‘Singaram’ to Release in Theatres on October 30!!
‘Singaram’ is a comedy and family entertainer directed by K.V. Kathirvelu, who previously directed ‘Rajavamsam’, with music composed by Sam C.S. Produced jointly by A.S. Ramana Balaji and Padmavathi Gandhi under the banner of Raack Productions, the film is all set to release worldwide in theatres on October 30, 2026.
Yogi Babu, who has been entertaining audiences in Tamil cinema with his distinctive style of comedy, plays the lead role in the film. Alongside him, Vela Ramamoorthy, M.S. Bhaskar, Maria Vincent, Charms, Aarthi Ganesh, Manobala, Kalki, Marimuthu, Padava Gopi, Sendrayan, T.S.R., Deepa Shankar, Sabitha Rai, Java Sundaresan, K.M. Ganeshkar, and several others have played important roles.
In the film, Yogi Babu belongs to the Narikuravar community. The central theme revolves around his journey of confronting the oppression and life challenges he faces and gaining the courage to determine his own life. Through a screenplay that blends comedy with emotionally moving moments, the film portrays the journey of a man who fights to establish his rights and self-respect. Focusing on the problems encountered in everyday life and the determination required to overcome them, ‘Singaram’ has been crafted to offer audiences a meaningful message along with entertainment.
Director K.V. Kathirvelu, who gained recognition through ‘Rajavamsam’, has directed this film. The presence of experienced actors alongside Yogi Babu is one of the film’s highlights. Bringing together comedy, family emotions, and the determination to face life’s challenges, the film has been created to appeal to audiences across all sections.
The cinematography for the film has been handled by Prasanna S. Kumar. Sam C.S. has composed the music. Lawrence Kishore is in charge of editing, while Gururaj has handled the art direction. Created with the contributions of experienced technicians, ‘Singaram’ is gearing up to offer an engaging theatrical experience filled with comedy and emotions.
Cast :
Yogi Babu, Vela Ramamoorthy, M.S. Bhaskar, Maria Vincent, Charms, Aarthi Ganesh, Manobala, Kalki, Marimuthu, Padava Gopi, Sendrayan, T.S.R., Deepa Shankar, Sabitha Rai, Java Sundaresan, K.M. Ganeshkar, and others.
Technical Crew:
Direction: K.V. Kathirvelu
Producers: A.S. Ramana Balaji, Padmavathi Gandhi
Production House:Raack Productions
Music: Sam C.S.
Cinematography: Prasanna S. Kumar
Editing: Lawrence Kishore
Art Direction: Gururaj
Public Relations: Riaz K Ahmed, Paras Riyaz.









