full screen background image

ஏ.ஆர்.ரஹ்மானை மேடையில் அவமானப்படுத்திய சல்மான்கான்..!

ஏ.ஆர்.ரஹ்மானை மேடையில் அவமானப்படுத்திய சல்மான்கான்..!

இப்படியொரு அவமானம் நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இதுவரையிலும் கிடைத்திருக்காது என்றே நினைக்கிறேன்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஹிந்தி திரைப்படம் ‘Raunaq.’ இந்த படத்தின் பாடல்களை மத்திய செய்தி மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர் கபில்சிபல் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மும்பையில் நடந்துள்ளது.

இந்த விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் சல்மான்கான், “அமைச்சர் கபில்சிபலின் பாடல்கள் அற்புதம்…” என்று சொல்லிவிட்டு “நம்ம அமைச்சரின் பாடல்களுக்கு முன்னால், ரஹ்மானின் இசை சாதாரணம். அவர் ஒரு ஆவரேஜ் கம்போஸர்தானே…” என்று மேடையிலேயே கூறியிருக்கிறார்.

இதைக் கேட்டு ரஹ்மானின் முகம் இருண்டு போய்விட்டதாம். ஏற்கெனவே ரஹ்மானுக்கும், சல்மான்கானுக்கும் இடையில் ஒரு பெரிய வாய்க்கா-வரப்பு தகராறு நடந்துள்ளது. இந்திய அளவில் புகழ் பெற்ற ரஹ்மானின் பாடலான ‘ஜெய் ஹோ’ பாடலின் தலைப்பிலேயே சல்மான்கான் தன்னுடைய புதிய படத்தைத் துவங்கியபோது ரஹ்மான் அதை எதிர்த்து சல்மான்கானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப.. இருவரும் பரஸ்பரம் கோர்ட்டில் மோதிக் கொண்டார்களாம். பின்பு வெளியில் சமரசமாக பேசித் தீர்க்கப்பட்டதாம்.

இந்த நிலையில் சமயம் பார்த்து சல்மான்கான் ரஹ்மானை அவமானப்படுத்திவிட்டதாக பாலிவுட் மீடியாக்கள் எழுதுகின்றன. இந்தப் பேச்சு முடிந்தவுடன், “நாம ரெண்டு பேரும் எப்போ சேர்ந்து படம் செய்வது..?” என்று சல்மான் ரஹ்மானிடம் கேட்டிருக்கிறார். இதற்கு மிக நாகரிகமாக “கூடிய சீக்கிரமே செஞ்சிருவோம்..” என்று பதில் சொல்லியிருக்கிறார் ரஹ்மான்.

salman-khan-insults-ar-rahman

முதல் முறையாக போட்டியிட்ட வருடத்திலேயே 2 ஆஸ்கர் விருதுகளை வென்ற உலகம் போற்றும் இசையமைப்பாளரை ‘ஒரு சாதாரண ஆவரேஜ் கம்போஸர்’ என்று அழைக்குமளவுக்கு சல்மான்கான் என்ன பெரிய பருப்பா என்று ரஹ்மானின் ஆதரவாளர்கள் சவுண்டுவிட்டுக் கொண்டிருக்க.. பிரச்சினை பெரிதாவதை உணர்ந்த சல்மான்கான், “இது ச்சும்மா காமெடிக்காக பேசியது.. யாரும் சீரியஸா எடுத்துக்க வேண்டாம்.. எனக்கு ரஹ்மான் மியூஸிக் மேல ரொம்ப மரியாதை எப்பவும் உண்டு..” என்று டிவிட்டரில் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சீவி சிங்காரிச்சு அழைச்சுட்டுப் போய் மூக்கறுத்த கதை இதுதான்..! அடக்கமாக இருப்பவர்களுக்கு இதுதான் பிரச்சினை. ஷாரூக்கான் மாதிரி அப்போதே கையை முறுக்கியிருந்தா…………….?

Our Score