full screen background image

இயக்குநர் பாரதிராஜாவுக்கு கேரள அரசு செய்திருக்கும் மரியாதை..!

இயக்குநர் பாரதிராஜாவுக்கு கேரள அரசு செய்திருக்கும் மரியாதை..!

இந்தச் செய்தி நம் காதுகளுக்கு வந்தபோது சந்தோஷமாகவும், பெருமிதமாகவும்தான் இருந்தது..!

இயக்குநர் இமயம் பாரதிராஜா, சென்ற ஆண்டுக்கான சிறந்த படங்களைத் தேர்வு செய்யும்  கேரள அரசின் தேர்வுக் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தி உண்மையில் மனமகிழ்ச்சியைத்தான் தந்தது..

இந்தக் குழுவில் இவருடன் எடிட்டர் பீ.லெனின், இயக்குநர் ஹரிகுமார்.. ஒளிப்பதிவாளர் ஆனந்தக்குட்டன், இசையமைப்பாளர் ஆலப்பாய் ரங்கநாத், சூர்யா கிருஷ்ணமூர்த்தி மற்றும் நடிகை ஜலஜா ஆகியோரும் தேர்வுக் கமிட்டி உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

மத்திய அரசு விருதுகளை தேர்வு செய்து கொடுக்கும் தேர்வு கமிட்டிக்கு அனைத்து மாநில பிலிம் சேம்பர் மூலமாக சினிமா துறையினரை தேர்வு செய்து கொள்வார்கள். ஆனால் மாநில அளவிலான தேர்வு கமிட்டியில் அந்தந்த மாநிலத்தில் உள்ள மூத்த கலைஞர்களைத்தான் நியமிப்பார்கள். இப்போதுதா்ன் முதல் முறையாக கேரளாவில் இப்படியொரு வெளிமாநில மூத்தக் கலைஞர் இடம் பெறுகிறார் என்று நினைக்கிறோம்.. இத்தனைக்கும் பாரதிராஜா இதுவரையில் மலையாளத்தில் எந்தப் படைப்பையும் செய்யவில்லை என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

தமிழ்நாட்டில் அரசு விருதுகளுக்கான தேர்வு கமிட்டியில் சம்பந்தமே இல்லாமல்.. சினிமா என்றால் என்னவென்றே தெரியாத… அரசு அதிகாரிகளும் இடம் பெற்றிருப்பார்கள். அதற்கு இது பரவாயில்லை.. கேரள அரசை இதற்காகவாவது பாராட்டுவோம்..!

இதில் நமக்கு ஒரேயொரு சந்தேகம்தான்.. எப்போதும் நான் தமிழன்.. நான் தமிழன் என்றே கூறிக் கொண்டு இனவாதம் பேசும் பாரதிராஜா.. தமிழ்நாட்டில் இப்படியொரு தேர்வு கமிட்டிக்கு ஒரு மலையாளியையோ.. அல்லது கன்னடத்துக்காரரையோ.. அல்லது ஒரு தெலுங்கரையோ தமிழக அரசு நியமித்திருந்தால் என்ன செய்திருப்பார்..? பொங்கியிருப்பாரா..? மாட்டாரா..?

Our Score