full screen background image

நடிகர் ஆரி நடிக்கும் ‘ரிலீஸ்’ திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!

நடிகர் ஆரி நடிக்கும் ‘ரிலீஸ்’ திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!

MANO CREATION நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராஜா  தயாரிப்பில், இயக்குநர் LR. சுந்தரபாண்டியின் இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும், பரபர திரில்லர் திரைப்படமான “ரிலீஸ்” படத்தின் படப்பிடிப்பு, இன்று படக் குழுவினர் கலந்து கொள்ள, எளிமையான பூஜையுடன், இனிதே துவங்கியது.

இப்படத்தில் நாயகனாக நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்கிறார்,  தீப்ஷிகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆராத்யா,  இயக்குநர் சுப்ரமணிய சிவா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இயக்குநர் – LR.சுந்தரபாண்டி, தயாரிப்பாளர்: ராஜா, நிர்வாக தயாரிப்பாளர் – சூரிய பிரகாஷ்.P, ஒளிப்பதிவு – J.லக்ஷ்மன், இசை – எஸ்.சங்கர் ராம், படத்தொகுப்பு – ரஞ்சித் C.K., கலை இயக்கம் –  சுரேஷ் கல்லேரி, காஸ்ட்யூம் டிசைனர் – திவ்யா, சண்டை இயக்கம் – டேஞ்சர் மணி, பத்திரிக்கை தொடர்பு : A ராஜா.

சென்னையின் மையப் பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில்,  இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் L.R. சுந்தரபாண்டி.

சென்னையை ஒட்டி, மஹேந்திரா சிட்டி பகுதியில் இப்படத்தின்  முதல் கட்டப் படப்பிடிப்பை நடத்த படக் குழு திட்டமிட்டுள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Our Score