மகிழ் மூவி மேக்கர் சார்பில் சிவ கணேஷ் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ராயல் சல்யூட்’.
இப்படத்தில் புதுமுகங்கள் பிரதீப். யுவராஜ். சுபாஷ் சிம்பு. எம்ஜிஆர் இன்பா. ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் போர் காட்சிகளை மிக நேர்த்தியாக கணேஷ் முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை – ஜெய் கிஷன், படத்தொகுப்பு – ஆர்.கே.விஜய், பாடல்கள் – ஜெய் சிவசேகர். இப்படத்தை எழுதி இயக்குகிறார் ஜெய் சிவசேகர்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் ஜெய் சிவசேகர் பேசும்போது, “நேர்மையான ராணுவ வீரன் வீரன் சக்திவேல் எல்லைப் பகுதியில் மாட்டிக் கொள்கிறான். பாகிஸ்தான் ராணுவ வீரன் பக்ரு சக்திவேலை காப்பாற்றுகிறான். ஒரு சூழலில் இந்திய ராணுவ வீரர்கள் வசம் பக்ரு மாட்டிக் கொள்ள பாக்ருவை சுட்டுக் கொல்ல உயர் அதிகாரி சக்திவேலுக்கு உத்தரவிடுகிறார். சக்திவேல் தன்னைத்தானே சுட்டுக் கொன்று இறக்கிறான். இதுதான் படத்தின் கதை..” என்றார்.
படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.









