மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் தயாரித்து வரும் படம் ரோமியோ ஜூலியட்.
இதில் ஜெயம் ரவியும், ஹன்சிகா மோத்வானியும் ஜோடியாக நடிக்கிறார்கள். இன்னொரு நாயகியாக பூனம் பாஜ்வா நடிக்கிறார். மற்றும் சித்தப்பூ VTV கணேஷூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – S. சௌந்தர்ராஜன்
இசை – D. இமான்
கலை – மிலன்
நடனம் – ஷெரீப்
ஸ்டன்ட் – திலீப் சுப்பராயன்
எடிட்டிங் – ஆண்டனி
தயாரிப்பு – எஸ். நந்தகோபால்
எழுத்து – இயக்கம் – லஷ்மண்
படம் பற்றி இயக்குனர் லஷ்மணிடம் கேட்டோம். “இதுவொரு ஜாலியான ஒரு காதல் இது. படம் பார்க்கிற ஒவ்வொருவரும் நிச்சயம் ரசிப்பார்கள். இந்தப் படத்திற்காக புரசைவாக்கம் அருகே பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டன. கலை இயக்குனர் மிலனின் கைவண்ணத்தில் ஒரு கோடி ரூபாய் பொருட்செலவில் அமைக்கப்பட்ட அந்த வீட்டில் படத்தில் இடம் பெறும் சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன. விரைவில் அங்கே ஜெயம் ரவி – ஹன்சிகா பங்கேற்கும் குத்துப் பாட்டு ஒன்றும் படமாக்கப்படவுள்ளது… தீபாவளிக்கு முன்பே படத்தை திரையிட ஏற்பாடு செய்து வருகிறோம்..” என்றார்.