full screen background image

நடிகை லட்சுமி மஞ்சுவின் ‘விவகாரமான’ பேஸ்புக் செய்தி..!

நடிகை லட்சுமி மஞ்சுவின் ‘விவகாரமான’ பேஸ்புக் செய்தி..!

தனி மனித கருத்துச் சுதந்திரம் எந்த அளவுக்கு போகும் என்பதற்கு தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சுவின் இன்றைய பேஸ்புக் ஸ்டேட்டஸும் ஒரு உதாரணம்.

ரொம்பச் சாதாரணமாக “நான் இன்றைக்கு இந்தியாவின் வருங்கால பிரதமரைச் சந்தித்தேன்” என்று சென்ற மாதம் அவர் எழுதிய செய்தியை போலவே, “இன்று முதல் நான் உள்ளாடை அணிவதை நிறுத்தப் போகிறேன்…” என்று பதிவு செய்திருக்கிறார்.

வழக்கம்போல கருத்துச் சுதந்திரப் போராளிகள் இதனை ஆதரிப்பதை போல லைக் போட்டுவிட்டுப் போக.. அடச் சீ என்று நினைத்தவர்கள் மட்டும், “ஏன் மேடம் இப்படி.. உண்மையிலேயே இதை நீங்கதான் எழுதுனீங்களா இல்லாட்டி உங்க பேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் ஆகியிருச்சா..” என்றெல்லாம் அக்கறையாக விசாரித்திருக்கிறார்கள். “நானேதான் எழுதினேன்.. ஜஸ்ட் ஜோக்குதான்.. இதை யாரும் சீரியஸா எடுத்துக்காதீங்க..” என்று மறுமொழியும் சொல்லியுள்ளார்..

லட்சுமி மஞ்சுவின் இந்தப் பதிவிற்கு வழக்கம்போல ஆதரவு, எதிர்ப்பு என்று பலவும் வந்து விழுந்ததாம்.. “ஒரு நடிகை இணையத்தளத்தில் இப்படி அசிங்கமாக எழுதியதை இதற்கு முன் நான் பார்த்ததில்லை” என்று பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் கமெண்ட் அடித்துள்ளர்.

லட்சுமி மஞ்சு சிறு வயதில் இருந்தே போல்டாக பேசுபவர். 2 முறை திருமணம் செய்து விவாகரத்து செய்தவர். இப்போது தெலுங்கு சின்னத்திரையிலும் மிகவும் பிரபலம். தெலுங்கு ‘மா’ டிவியில் பிரபலங்களை பேட்டியெடுக்கும் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம்.. எப்போதும் தன் மகளின் தைரியத்தைப் புகழ்ந்து பேசும் இவருடைய அப்பாவான நடிகர் மோகன்பாபு, தனது மகளின் இந்தச் செயலை கண்டித்துள்ளார். தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில்,  “எனது மகளின் மிக மோசமான ஜோக்காக நான் இதை கருதுகிறேன்..” என்று கூறியுள்ளார் மோகன்பாபு.

பல இடங்களில் இருந்தும் கண்டனக் குரல்கள் வந்து கொண்டேயிருக்க பேஸ்புக் பதிவை வழக்கம்போல நீக்கிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார் மஞ்சு.

சினிமாக்காரங்க எல்லாருக்கும் எல்லாமும் ஜோக்காகத்தான் தெரியும்..!

Our Score