full screen background image

“லெஸ்பியன் கேரக்டரில் நடித்தது ரொம்பவும் புதுமையாக இருந்தது”- நடிகை ரெஜினாவின் அனுபவப் பேட்டி

“லெஸ்பியன் கேரக்டரில் நடித்தது ரொம்பவும் புதுமையாக இருந்தது”- நடிகை ரெஜினாவின் அனுபவப் பேட்டி

தமிழில் அதிகப் படங்களில் நடித்துள்ள நடிகை ரெஜினா கேஸண்ட்ரா, தெலுங்கு படங்களிலும் தற்போது அதிகமாக நடித்து வருகிறார்.

தான் எப்படி படங்களைத் தேர்வு செய்கிறேன் என்பது பற்றி அவர் சமீபத்தில் பேட்டியளித்திருக்கிறார்.

அவருடைய அந்தப் பேட்டியில், “வித்தியாசமான கதை.. கதாபாத்திரமாக இருந்தால்தான் இனிமேல் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். கவர்ச்சியாக எப்போது வேண்டுமானாலும், எந்த மொழியில் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால், வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தால்தான் பெயர் கிடைக்கும்.

கொஞ்ச காலத்திற்குப் பிறகு ரெஜினா என்றொரு திறமையான நடிகை இங்கே இருந்தார் என்ற பேச்சு என்னைச் சுற்றி இருக்குபடி செய்ய வேண்டும். இதுதான் எனது தற்போதைய குறிக்கோள்.

ஒரு இந்திப் படத்தில் லெஸ்பியன் கேரக்டரில் நடித்தது எனது திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். இது மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்பதை நான் அதுவரையிலும் யாரிடமும் சொல்லவில்லை. கதை கேட்டதும் அதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதில் நடித்த பிறகு இது போன்ற சவாலான கதாபாத்திரங்களை கொடுத்தால் நம்மால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை எனக்குள் பிறந்துள்ளது.

எனவே, இனிமேல் கவர்ச்சியைத் தவிர்த்து வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன்..” என்று சொல்லியிருக்கிறார் நடிகை ரெஜினா கேஸண்ட்ரா.

Our Score