full screen background image

சூப்பர் ஸ்டார் ரஜினி வெளியிட்ட இரண்டாம் ரகசியம் நாடக டிவிடி..!

சூப்பர் ஸ்டார் ரஜினி வெளியிட்ட இரண்டாம் ரகசியம் நாடக டிவிடி..!

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் இரண்டாம் ரகசியம் நாடகம் அவரது மற்ற நாடகங்களைப் போல நகைச்சுவையாக இல்லாமல் மாறுபட்ட ஒரு தோற்றத்தைக் கொடுத்து வெற்றி பெற்ற நாடகம்.

சமீபத்தில் சென்னையில் பல இடங்களில் இந்த நாடகத்தை நடத்தினார் ஒய்.ஜி.மகேந்திரன். இந்த நாடகத்தில் இவருடன் நடிகை லட்சுமியின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ஜோடியாக நடித்திருந்தார்.

இப்போது இந்த நாடகத்தை டிவிடி பார்மெட்டில் கொண்டு வந்திருக்கிறார்கள். மது எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்துடன் இணைந்து இதனைத் தயாரித்திருக்கிறது. ஸ்வாதி சாப்ட் சொல்யூஷன் நிறுவனம் டிவிடி களப் பணிகளைச் செய்திருக்கிறது.

இந்த டிவிடிக்கள் அடுத்த வாரம் முதல் www.kalakendra.com என்ற இணையத்தளம் மூலமாக இணையத்திலும் விற்பனைக்கு வருகிறது. சென்னையில் உள்ள முக்கிய கடைகளில் இந்த டிவிடி தற்போது கிடைக்கிறது.

இந்த டிவிடியின் முதல் பிரதிகளை ஒய்.ஜி.மகேந்திராவின் தாயார் திருமதி ஒய்.ஜி.பி., நடிகை மனோரமா, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், திரு.சோ, இவர்களுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பெற்றுக் கொண்டார். 

Our Score