full screen background image

“விஜய் மேல் எனக்கென்ன பொறாமை?” – பிரஸ் மீட்டில் வெடித்த ரஜினிகாந்த்!

“விஜய் மேல் எனக்கென்ன பொறாமை?” – பிரஸ் மீட்டில் வெடித்த ரஜினிகாந்த்!

இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசும்போது,, “தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்ன பத்தி ஒரு ரெண்டு, மூணு விமர்சனங்கள் சோசியல் மீடியால.. அரசியல் உலகத்தில.. பரவலா வந்துச்சு. அதுக்கு வந்து நான் விடை கொடுக்கலைன்னு சொன்னா அது வந்து உண்மையா ஆயிடும்…!

நான் நேற்று பெங்களூர் செல்லும்போது “நீங்க யாராவது வந்து இருப்பீங்க,, விடை கொடுக்கலாம்” என்று நினைத்தேன்… திரும்பி வரும்போது அங்க மீடியா யாரும் இல்ல.. பதினெட்டாம் தேதி கேரளாவில் ஷூட்டில் இருந்தது. அப்போதும் அதற்கு விடை கொடுக்கலாம் என்று இருந்தேன். அப்போதும் நீங்க யாரும் வரல..

முதலாவதாக தேர்தல் முடிவுகள் வந்தபோது நான் ஸ்டாலின் சாரை போய் பார்த்தேன். அதுல கொஞ்சம் விமர்சனங்கள் வந்துச்சு.. ஸ்டாலின் சார் என்னுடைய 38 ஆண்டுகளாக நண்பர். எங்களுடைய நட்பு கொள்கைகள், அரசியலுக்கு அப்பாற்பட்டது… ஜனநாயகத்தின் தோல்வி வெற்றி சகஜம்.. இருந்தாலும் ஸ்டாலின் சார் கொளத்தூரில் தோற்றது எனக்கு சங்கடமாக இருந்தது.. அப்படித்தான் நான் பேசுனேன். அதற்காக நண்பன் என்ற முறையில் நட்பு முறையில் நான் போய் பார்த்தேன்…. அதுக்கு நான் விஜய் வந்து சிஎம் ஆக கூடாது.. அவர் வரக் கூடாதுன்னு அதை தடுக்க பார்த்தேன்.. மேலும்.. வேறு ஏதோ ரெண்டு பெரிய பார்ட்டிகள் ஒண்ணா சேரணும்னு நான் பேசினேன்னு சொல்றாங்க… இப்படின்னு சில விமர்சனங்கள் வருது… அந்த சூழ்நிலையில அப்படி எல்லாம் பேச முடியுமா? அப்படிப் பேச இந்த ரஜினிகாந்த் ஒரு தரம் கெட்ட ஆள் இல்லை.. அதை நான் இப்போ இங்கே தெளிவுபடுத்துகிறேன்.

இரண்டாவதாக நான் விஜய் வாழ்த்தவில்லை என்று சொல்கிறார்கள். அவர் ஜெயிச்ச உடனேயே நான் எக்ஸ் தளத்துல வாழ்த்துக்கள் பதிவிட்டேன். நான் 2016ல அரசியலுக்கு வரேன்னு சொன்னபோது ஏர்போர்ட்டில் மீடியாக்காரங்க இருப்பாங்க.. அவர்களுக்கு பதில் சொல்வது வழக்கம்…

அதேபோல் மீடியாக்காரங்க இருப்பாங்களான்னு கேட்டபோது மீடியாக்காரர்கள் இல்லை என்று சொன்னார்கள்… திடீர் என்று ஒரு சின்ன போன் வைத்துக்கொண்டு ஒருவர் கேள்வி கேட்க அவர் மீடியாக்காரன் இல்லாததுபோல் எனக்கு தெரிந்தது… திடீரென்று வந்து “விஜய் சி.எம். ஆயிட்டாரு அதுக்கு நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேள்விகள் எழுப்ப,… நான் ஷாக் ஆயிட்டேன். அப்போ கேள்வி கேட்டவர், மீடியா மாதிரியே தெரியல எனக்கு.. நான் சிரித்துக் கொண்டே போய்விட்டேன்.. அதற்கு நான் வாழ்த்து சொல்லவில்லை என்று ஒரு விமர்சனம் வைக்கிறார்கள்..

மற்றொன்று விஜய் மேல் எனக்கு பொறாமை என்று.! நான் இப்போ அரசியலில் இல்லை. அரசியலில் இருந்து விலகிவிட்டேன். நான் அரசியலில் இல்லாதபோது எனக்கு ஏன் அவர் மேல் பொறாமை.. ஒருவேளை கமலஹாசன் முதலமைச்சராக வந்திருந்தா பொறாமை வந்திருக்குமோ தெரியாது…. அப்போகூட வந்திருக்காது… கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்கிறது கிடைக்காது… எனக்கும் விஜய்க்கும் ஒரு ஜெனரேஷன் கேப் இருக்கு. கிட்டத்தட்ட 25 வருடம்.

நான் முதலிலேயே சொல்லி இருக்கேன்.. நான் வந்து விஜய கம்பேர் பண்ணா அது எனக்கு நல்லதல்ல.. கெட்ட பேரு.. விஜய் என்னை கம்பேர் பண்ணா அது அவருக்கு கெட்ட பேரு.. விஜய்யை சின்ன வயசுல இருந்து அவரை பார்த்துகிட்டு இருக்கேன்.. அவர் முதலமைச்சர் ஆனதில் எனக்கு என்ன பொறாமை…? அதுவும் இந்த சின்ன வயசுல 52 வயசுல எம்.ஜி.ஆர். என்.டி.ஆர். சாதனை பண்ணதவிட ஜாஸ்தி..

சென்டர்n பிஜேபி.. எவ்ளோ பெரிய பவர்ஃபுல் சென்டர்.. இங்க ரெண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து தனி ஆளா வந்து ஜெயிச்சிருக்காjg.. அதுவும் சினிமா இண்டஸ்ட்ரில இருந்து… எனக்கு பொறாமை இல்ல.. ஆச்சரியம் கலந்த ஒரு சந்தோஷம்.. சோ விஜய் மேல எனக்கு பொறாமை இல்ல.. விஜய்கிட்ட நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு ஜனங்ககிட்ட.. அந்த எதிர்பார்ப்பு எல்லாம் மக்களுக்கு நல்லது செய்யணும்.. செய்வாங்க.. என்ற நம்பிக்கை இருக்கு… அவருக்கு வாழ்த்துக்கள்…!

பதவியேற்பு விழாவின்போது ஜெயலலிதா அவர்கள் ஆசைப்பட்டிருந்தாங்க. நான் போயிருந்தேன் அது மட்டும் சொல்ல நினைத்தேன் மிஸ் ஆயிடுச்சு… நினைவு கூர்கிறேன்..!” என்று சொல்லி முடித்தார்.

Our Score