‘அடுத்த வாரிசு’ படத்தில் ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

‘அடுத்த வாரிசு’ படத்தில் ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

இப்போதைய உச்ச நடிகர்களின் சம்பக் கணக்கைக் கேட்டால் நமக்கே தலை சுற்றும். அலட்சியமாக கோடிகளில் சொல்வார்கள்.

இதுவே 1980-களில் சில லட்சங்கள் என்று மட்டுமே இருந்தது. காலப்போக்கில் உலகம் தழுவிய பொருளாதார மாற்றத்தினால் விலைவாசி உயர்வு என்பது அனைத்துத் துறைகளில் பரவிய பிறகு அனைத்துத் துறை தொழிலாளர்களின் சம்பளமும் உயர்ந்திருக்கிறது.

1983-ம் வருடம் பிரபல கன்னட தயாரிப்பாளரும், நடிகருமான துவாரகீஷின் தயாரிப்பில் வெளியான ‘அடுத்த வாரிசு’ திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் ரஜினிக்கு 7 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது.

அதற்கடுத்த ஆண்டு 1984-ல் ‘மலையூர் மம்பட்டியான்’ படத்தை ஹிந்தியில் இதே தயாரிப்பாளரான துவாரகீஷ் ‘கங்குவா’ என்ற பெயரில் ரீமேக் செய்போது தமிழில் தியாகராஜன் நடித்த கதாபாத்திரத்தில் ரஜினியே நாயகனாக நடித்திருந்தார். அப்போது ரஜினிக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் 18 லட்சம் ரூபாய்.

1986-ம் வருடம் ரஜினி, ஸ்ரீதேவி நடிப்பில் துவாரகீஷ் தயாரித்து இயக்கிய நான் அடிமை இல்லை’ திரைப்படத்தில் நடிப்பதற்காக ரஜினி வாங்கிய சம்பளம் 25 லட்சம் ரூபாய்.

25 வருடங்கள் கழித்து இன்றைக்கு அதே ரஜினி வாங்கும் சம்பளம் 60-ல் இருந்து 70 கோடி என்கிறார்கள்.

இடைப்பட்ட 25 வருட காலத்தில் சினிமா துறை எந்த அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதை இதிலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம்.