ஜான்சன் – சந்தானம் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ திரைப்படம்

ஜான்சன் – சந்தானம் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ திரைப்படம்

ஹிட் அடித்த கூட்டணி மீண்டும் இணைந்தால் எப்போதுமே எதிர்பார்ப்பு இரட்டிப்புதான். அப்படியொரு இரட்டிப்பு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது நடிகர் சந்தானம் – இயக்குநர் ஜான்சன் கூட்டணி.

‘ஏ-1’ படத்தின் மூலம் பார்வையாளர்களை வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தது சந்தானம் – ஜான்சன் கூட்டணி. வசூல் ரீதியாக அனைவரும் லாபம் ஈட்டிய இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

லார்க் ஸ்டியோஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் கே.குமார் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

காமெடிக்கு பஞ்சமில்லாமல் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ‘பாரீஸ் ஜெயராஜ்’ எனப் பெயரிட்டுள்ளது படக் குழு.

இந்தப் படத்தில் சந்தானத்துக்கு நாயகிகளாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரா இருவரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன் பணிபுரிந்துள்ளார். ‘ஏ-1’ படத்துக்குத் தன் பாடல்களால் மெருகூட்டிய சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

படத் தொகுப்பாளராக பிரகாஷ் மாபு, சண்டை இயக்குநராக ஹரி தினேஷ் பணியாற்றியுள்ளனர். அனைத்து பாடல்களுக்கும் சாண்டி நடனம் அமைத்துள்ளார். பாடல் வரிகளை ரோகேஷ் எழுதியுள்ளார்.

இன்றைக்கு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

டீஸர், ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

கொரோனா அச்சுறுத்தலால் இறுக்கமான மனங்களைச் சிரிப்பு மழையில் நனைய வைத்து இதமாக்க 2021-ம் ஆண்டு ஜனவரியில் ‘பாரீஸ் ஜெயராஜ்’ திரைப்படம் வெளியாகவுள்ளது.

Our Score