மே 3. இன்றைய நாள இந்திய சினிமா வரலாற்றில் மறக்க முடியாத நாள்..
இந்திய சினிமாவின் முதல் முழு நீள திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா 1913-ம் ஆண்டு இதே தேதியில்தான் வெளியானது.
இந்திய சினிமாவின் தந்தை என்றழைக்கபடும் தாதா சாஹேப் பால்கே தனது சொந்தத் தயாரிப்பில் இயக்கி வெளியிட்ட இப்படம் ஒரு ஊமை படமாக இருந்தபோதிலும் 40 நிமிடங்கள் ஓடக் கூடிய அளவுக்கு 4 ரீல்களில் தயாரிக்கப்பட்டிருந்தது. இதில் நடித்தவர்களில் பெரும்பாலோர் மராத்தி நாடக நடிகர்கள். அந்த வரிசையில் இது முதல் மராத்தி படமும்கூட.
அரிச்சந்திர மகாராஜாவின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது இந்தப் படம்.. இந்தக் கதையை எழுதியவர் Ranchodbai udayram. விவரித்து எழுதியவர் பால்கேதான். D.D.dabke, P.G. Sane இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மற்றும் Dattatreya Kshirsagar, Dattatreya Telang, Ganpat G. Shinde, Vishnu Hari Aundhkar, Nath T. Telang ஆகியோரும் உடன் நடித்திருந்தனர்.
Trymbak B.Telang என்பவர் ஒளிப்பதிவு செய்திருந்தார். Coronation Cinematograph என்ற முறையில் படமாக்கப்பட்டிருந்தது. ஒரே ஒரு பிரிண்ட்டுதான் போடப்பட்டிருந்தது.
தாதாசாஹேப் பால்கே ஒரு தயாரிப்பாளர், இயக்குநர் மட்டுமல்ல.. அப்போதே இது மாதிரியான ஒரு புதிய முயற்சியை மக்களிடத்தில் எப்படி கொண்டு செல்வது என்பதற்கான வழியையும் அறிந்தவராகவே இருந்திருக்கிறார்.
அதே 1913-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ம் தேதியே இந்த ஊமை படத்தை ஒலிம்பியா அரங்கத்தில் மும்பையின் மிகப் பெரிய புள்ளிகளையும், மும்பையில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளின் ஆசிரியர்களையும் அழைத்து போட்டுக் காண்பித்திருக்கிறார். இதன் பின்பு இந்தப் படம் பற்றிய விளம்பரம் பால்கே நினைத்தது போலவே மக்கள் மத்தியில் பரவியிருந்தது.
1913-ம் ஆண்டு மே 3-ம் தேதி மும்பையில் இருந்த Coronation Cinema அரங்கத்தில் பொதுமக்களுக்காக இந்தப் படம் திரையிடப்பட்டது. மிகப் பெரிய அளவுக்கு விளம்பரங்கள் செய்திருந்ததால் மக்கள் கூட்டம் வரிசையில் நின்று காத்திருந்து இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார்கள். இது மவுத் டாக்காகவே பரவ.. மேலும் சில பிரிண்ட்டுகள் போடப்பட்டு மும்பையைச் சுற்றியிருககும் பகுதிகளில் திரையிடப்பட்டுள்ளது. அதன் பின்பு இந்தியா முழுவதற்கும் பல ஊர்களுக்கு் இதன் பிரிண்ட் கொண்டு வரப்பட்டு காண்பிக்கப்பட்டது.
இது ஊமை படம் என்றாலும் சில இடங்களில் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் சப் டைட்டில்களைகூட அமைத்திருந்தார் பால்கே.. அதனால் உண்மையாகவே ஒரு கற்பனையில்கூட நினைத்திராத ஒரு உலகத்தை இந்தப் படம் அந்தக் காலத்திய ரசிகர்களுக்குக் காட்டியிருக்கும்..
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்தப் படத்தின் பிரிண்ட்டில் முதல் ரீலும், கடைசி ரீலும் மட்டுமே புனேயில் உள்ள திரைப்பட ஆவணக் காப்பகத்தில் பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறதாம்.. இரண்டு, மற்றும் மூன்றாவது ரீல்கள் கிடைக்கவில்லையாம்.
இந்திய சினிமாவின் துவக்கப் புள்ளியான இன்றைய நாளில் ராஜா ஹரிச்சந்திராவையும், தாதா சாஹேப் பால்கேவையும் மறக்காமல் நினைவில் வைத்திருக்க வேண்டியது இந்திய திரையுலகத்தின் கடமை..!