நடிகர் ரன்வீர்சிங், நடிகை தீபிகா படுகோனேவுக்கு எதிராக அரெஸ்ட் வாரண்ட்..!

நடிகர் ரன்வீர்சிங், நடிகை தீபிகா படுகோனேவுக்கு எதிராக அரெஸ்ட் வாரண்ட்..!

பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங், நடிகை தீபிகா படுகோனே இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி முசாபர்பர் நகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்தாண்டு வெளியான ‘ராம்லீலா’ படத்தின் சில காட்சிகள் இந்து மதத்தினரை புண்படுத்துவதாகவும், இந்து மதத்தின் நம்பிக்கைகளை கிண்டல் செய்வதாகவும் கூறி அந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கேட்டு சுதிர்குமார் ஓஜா என்ற வழக்கறிஞர் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர்பர் நகர கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கோர்ட்டில் இருக்கும்போதே படமும் ரிலீஸாகிவிட்டது. அதன் பின்பு கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தயாரிப்பாளர் தரப்பில் இருந்து யாருமே விசாரணைக்கு ஆஜராகவில்லை. அப்போது ஒத்தி வைக்கப்பட்ட வழக்கு இன்றைக்கு மீண்டும் விசாரணைக்கு வந்ததாம். இன்றைக்கும் தயாரிப்பாளர் தரப்பினர் இதனை கண்டு கொள்ளாமலேயே விட்டுவிட்டார்கள்..

இதனால் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி, நடிகர் ரன்வீர் சிங், நடிகைகள் தீபிகா படுகோனே, மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய நால்வரையும் கைது செய்து வரும் ஜூன் 4-ம் தேதி முசாபர்பர் கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி மும்பை நகர போலீஸ் ஆணையருக்கு உத்தரவு அனுப்பியுள்ளார் மாஜிஸ்திரேட்.

இயக்குநர் சொல்லிக் கொடுத்ததைத்தான் நாங்க பேசினோம்.. நடிச்சோம்ன்னு சொல்லிட்டு போயிக்கிட்டேயிருக்கலாம். ஆனா அதுக்கும் கோர்ட்ல ஆஜராகித்தானே சொல்ல முடியும்..? போகச் சங்கடப்பட்டா இப்படி விலங்குதான் வரும்..!

Our Score