சேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’

சேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’

மலையாள திரையுலகின் பெரும் தயாரிப்பு நிறுவனமான பல்லாட் கொக்கட் ஃபிலிம் ஹவுஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் சோமன் பல்லாட், தாமஸ் கொக்காட் இணைந்து தயாரித்து வரும் தமிழ்த் திரைப்படம் ‘ராஜாவுக்கு செக்’.

இந்தப் படத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு சேரன் நாயகனாக நடித்திருக்கிறார். சேரனுடன் நந்தனா வர்மா, சராயு மோகன், ஸ்ருஷ்டி டாங்கே, இர்ஃபான் ஆகியோர் நடிக்கிறார்கள்.

பிரபல ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். வினோத் யஜமான்யா இசையமைக்கிறார். கலை இயக்குநராக பி.ராஜுவும், சி.எஸ்.பிரேம் படத் தொகுப்பாளராகவும் பணி புரிகிறார்கள். சண்டை பயிற்சி – டேஞ்சர் மணி, பாடல்கள் -ஜெயந்தா, ஸ்டில்ஸ் – தேனி செல்வம், எழுத்து, இயக்கம் – சாய் ராஜ்குமார்.

director seran

இந்தப் படம் குறித்து பேசிய தயாரிப்பாளர்கள், “மலையாள திரையுலகில் கதை ரீதியாகவும், தரம் ரீதியாகவும் நல்ல தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரை நாங்கள் பெற்றிருக்கிறோம்.

உலகம் முழுக்க தமிழ் சினிமாவின் பரவலும், வர்த்தகத்துக்கு நிறைய வாய்ப்புகளும், மிகுதியான திறமையாளர்களும் இருப்பதால் தமிழ் சினிமாவில் படம் எடுக்க இப்போது காலடி எடுத்து வைத்திருக்கிறோம்.

ஒரு நடிகராகவும், இயக்குநராகவும் சேரன் அவர்களை மிகவும் வியந்து பார்க்கிறோம். சினிமாவை அதிகம் பார்க்கும் நடுத்தர குடும்ப மக்களிடம் சேரன் சார் மிக சிறப்பாக சென்று சேர்ந்துள்ளார்.

எங்கள் இயக்குநர் ஜெயம் ரவி, ஸ்ரேயா நடிப்பில் ‘மழை’ படத்தையும், தெலுங்கின் மிகப் பெரிய தயாரிப்பாளரான தில் ராஜு மற்றும் பூரி ஜெகன்நாத் தயாரிப்பில் ‘ஹலோ ப்ரேமிஸ்தாரா’ படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த படங்களை ‘ராஜ்குமார்’ என்ற பெயரில் இயக்கியவர் தற்போது ‘சாய் ராஜ்குமார்’ என்று தன் பெயரை மாற்றியிருக்கிறார். அவரின் படங்களை பார்த்து, அவர் திறமை மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்.

‘ராஜாவுக்கு செக்’ என்ற தலைப்பே கவனத்தை ஈர்க்கும். திரைக்கதையோடு சரியான புள்ளியில் இணையும். சேரன் சார் குடும்ப கதைகளில் நடித்தவர். சாய் ராஜ்குமார் தமிழில் ஆக்‌ஷன், தெலுங்கில் த்ரில்லர் படத்தையும் இயக்கியவர். இவர்கள் இருவரும் இணைவதே ஆச்சர்யத்தை உருவாக்கும். சேரன் சாரை இதற்கு முன்பு பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் பார்ப்பீர்கள்.

இத்திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக அமையும். படப்பிடிப்பை மீண்டும் துவக்கியிருக்கிறோம், கூடிய விரைவில் மொத்த படமும் முடிந்து விடும்…” என்றனர்.

 

Our Score