தமிழகத்தையே பரபரப்பாக்கிய உடுமலைப்பேட்டை சங்கர் – கௌசல்யா காதல் கதையையும். இதில் இருக்கும் ஆணவக் கொலையை சித்தரிக்கும் உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டும் ஒரு புதிய திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அ ஆ இ ஈ – திரைப்பட்டரையின் சார்பில் தயாரிப்பாளர் N.மணிகண்டன் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.
காலம் காலமாக சமூகத்தில் பல துறைகளிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சாதி என்கிற ஒரு விஷயத்தில் மட்டும் இன்னமும் மாற்றம் காணாத சமூகமாக தமிழ்ச் சமூகம் இருப்பதைக் கவனித்தில் கொண்டு இத்திரைப்படத்திற்கு ‘மாறாத சமூகம்’ என்றே பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் காதர் என்ற புதுமுகம் ‘சங்கர்’ கேரக்டரிலும், ‘திலுவா’ என்னும் புதுமுகம் கெளசல்யா கேரக்டரிலும் நடித்துள்ளனர்.
இவர்களுடன், ‘நமோ’ நாராயணன், டெல்லி கணேஷ், தினேஷ், ஸ்ருதி, பிரவீன், சதீஷ், சக்தி, பாலு, எலிசபெத், ராஜேஷ், ரத்தினம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – எல்.தினேஷ் குமார், இசை – டென்னிஸ் ஜோஸப், சமன்த், தயாரிப்பு நிறுவனம் – அஆஇஈ-திரைப்பட்டறை, தயாரிப்பாளர் – மணிகண்டன்.N, இணை தயாரிப்பு – ஆர்.நரேஷ் மாதேஸ்வர், இயக்குநர் – பங்கஜ் எஸ்.பாலாஜி.
இத்திரைப்படத்திற்கு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆத்மார்த்தமான உதவிகளை செய்து படம் வெற்றி பெற வாழ்த்தியுள்ளார்.
தற்போது இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.