‘பாகுபலி-2’ படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்ஷ்ன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட் பட நிறுவனங்கள் இணைந்து தற்போது ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தயாரித்து வருகிறார்கள்.
இதை தொடர்ந்து விஜய்சேதுபதி, அஞ்சலி நடிக்க ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் S.U.அருண்குமாரின் இயக்கத்தில் புதிய படத்தை தயாரிக்கிறார்கள்.
விஜய்சேதுபதி நடிக்கும் இந்த படம் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த படத்தில் மாறுபட்ட வில்லனாக லிங்கா நடிக்கிறார். மற்றும் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.
இன்னும் பெயரிடப் படாத இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக் கண்ணன், படத் தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத், தயாரிப்பு மேற்பார்வை – கே.சிவசங்கர், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – S.U.அருண்குமார், தயாரிப்பு – எஸ்.என்.ராஜராஜன், யுவன்சங்கர்ராஜா.
இத்திரைப்படம் இயக்குநர் S.U.அருண்குமார், நாயகன் விஜய் சேதுபதி இருவரும் இணையும் மூன்றாவது படம் என்பது குறிபிடத்தக்கது.
இந்த படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. படப்பிடிப்பு தென்காசி மற்றும் மலேசியாவில் நடைபெற உள்ளது. இது ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது.