நடிகர்களெல்லாம் இயக்குநர்கள் ஆகிய காலம் போய் இப்போது தயாரிப்பாளர்கள் இயக்குநர்களாகிக் கொண்டிருக்கிறார்கள்…
திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் என்ற தனது நிறுவனம் சார்பில் ‘அட்டக்கத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘வில்லா-2’, ‘தெகிடி’ ஆகிய படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். “இந்தப் படங்களின் மூலம் ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ரமேஷ் ஆகிய இயக்குநர்களையும் கோடம்பாக்கத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
இப்போது ‘முண்டாசு பட்டி’, ‘லூசியா’ உள்ளிட்ட சில படங்களையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார். எத்தனை நாட்கள்தான் புதிய இயக்குநர்களை நாமே அறிமுகப்படுத்துவது..? நாமளே இயக்குநராகிவிட்டால் என்ன என்று யோசித்த சி.வி.குமார் இப்போது அதற்கான முதல் கட்டப் பணிகளை முடித்துவிட்டாராம்..
தன் படத்திற்கான கதை விவாதத்தை நடத்தி முடித்திருக்கிறாராம். இவர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. ஒளிப்பதிவிற்கு கோபி அமர்நாத்.. படத்தொகுப்பிற்கு ஜான் பால் என்ற தொழில் நுட்பக் கலைஞர்கள் பட்டியல் மட்டுமே தெரிந்துள்ளது.
மேலும் நடிகர்கள் மற்ற டெக்னீஷயன்ஸ் விவரங்கள் இன்னமும் வெளிவரவில்லை. நடிகர்கள் தேர்வு இப்போதுதான் மும்முரமாக நடந்து வருகிறதாம்..
தயாரிப்பாளராக வெற்றி கண்ட சி.வி.குமார், இயக்குநராகவும் வெற்றி காண வாழ்த்துகள்..!