இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்கள் திரை உலகில் ஆதிக்கம் செலுத்தும் காலம் இது. அவரது பாசறையில் இருந்து மற்றுமொரு உதவியாளர், இயக்குனராக அறிமுகமாகிறார் .
ஏற்கெனவே வசந்தபாலன், அறிவழகன், அட்லீ ஆகியோர் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி ஜெயித்திருக்கிறார்கள். இப்போது ‘கப்பல்’ என்ற படத்தை இயக்கி அறிமுகமாகிறார் கார்த்திக் ஜி க்ரிஷ். I ஸ்டுடியோஸ் என்னும் புதிய நிறுவனம், இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
‘சிவாஜி’ மற்றும் ‘எந்திரன்’ ஆகிய படங்களில் இயக்குனர் ஷங்கரிடம் பணிபுரிந்த அனுபவசாலியான கார்த்திக், தன்னுடைய ‘கப்பல்’ படத்தின் லோகோவை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
“இதில் தெரியும் வண்ண கலவை படத்தில் வரும் எண்ணற்ற உணர்ச்சிகளை குறிப்பது…” என்கிறார் இயக்குநர். “படத்தின் தலைப்பான ‘கப்பல்’ கதையின் போக்கையும், கதையில் வரும் கதாபாத்திரங்களின் பயணத்தையும் எதிரொலிக்கும்…” என்றார்.
எப்படியோ கப்பலை நல்லபடியாக கரை சேர்த்தால் நல்லதுதான்..!