இந்திய சினிமாவில் புது புது யுக்திகளை கடைபிடித்து ஒளிப்பதிவில் பல சாதனைகளையும் பிரமாண்டத்தையும் படைத்தது கொண்டிருப்பவர் ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் அவர்கள். ஒளிப்பதிவுத்துறை மட்டுமன்றி உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘குருதிப்புனல்’ படத்தின் மூலமாக தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதையும் நிருபித்தவர். இயக்குனர் மணிரத்தினத்துடன் இணைந்து ‘மவுன ராகம்’, ‘நாயகன்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘இதயத்தை திருடாதே’ போன்ற படங்களில் இவர் செய்த ஒளிப்பதிவு இன்றளவிலும் வெகுவாக பேசப்படுகிறது. தமிழ் மட்டுமன்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தற்போது பால்கி இயக்கத்தில், இளையராஜா இசையில், அமிதாப்பச்சன், தனுஷ் மற்றும் அக்சராஹாசன் நடிக்கும் ‘ஷமிதாப்’ என்னும் ஹிந்தி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இப்படத்திற்கு முன் பால்கி இயக்கத்தில் ‘பா’, ‘சீனி கம்’ மற்றும் விக்ரம் குமார் இயக்கத்தில் ’13 B’ போன்ற ஹிந்தி படங்களில் பணியாற்றியுள்ளார். ‘ஷமிதாப்’, இவர் ஹிந்தியில் பணியாற்றும் நான்காவது படம். ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஐ’ படத்தின் ஒளிப்பதிவாளரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது தமிழ்ச் சினிமாவின் பிரபல இயக்குனர் ஒருவரின் படத்தில் ஒப்பந்தமாகியுள்ள இவர், வருகிற 2015 வருடம்வரை பிஸியான ஒளிப்பதிவாளராக இருப்பார் என்கிறது கோடம்பாக்கம்.. வல்லவன் நிச்சயம் வாழ்வான்..!.