இன்று, ஜூன் 13, 2014 வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படங்களின் பட்டியல்..!
இன்று 6 நேரடி தமிழ்ப் படங்களும், 1 ஆங்கில டப்பிங் படமும் ரிலீஸாகியுள்ளன.
1. முண்டாசுப்பட்டி
பாக்ஸ் ஸ்டார் புரொடெக்சன்ஸுடன் சி.வி.குமாரும் இணைந்து தயாரித்திருக்கும் படம். இதில் விஷ்ணு விஷால், நந்திதா ஜோடியாக நடித்திருக்கின்றனர். மேலும் காளி, ஆனந்த்ராஜ், ராம்தாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஷீன் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ஷங்கர் ஒளிப்பதிவு செய்ய லியோ ஜான்பால் எடிட்டிங் செய்திருக்கிறார். புதுமுக இயக்குநர் ராம்குமார் இயக்கியிருக்கிறார்.
2. நான்தான் பாலா
சின்னக் கலைவாணர் விவேக் ஹீரோவாக நடித்து வெளியாகியிருக்கும் முதல் திரைப்படம் இது. sss Entertainments சார்பில் ஜெ.ஏ.லாரன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கியிருக்கிறார்.
3. உயிருக்கு உயிராக
கோவைத்தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை மனோஜ்குமார் இயக்கியிருக்கிறார். இதில் ஷரண்சர்மா, சஞ்சீவ், ப்ரீத்தி தாஸ், நந்தனா, பிரபு, ஸ்ரீரஞ்சனி நடித்திருக்கின்றனர். ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஷாந்தகுமார் இசையமைத்திருக்கிறார்.
4. திருடு போகாத மனசு
அஜந்தா பட நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் முற்றிலும் நாட்டுப்புறக் கலைஞர்களே நடித்திருக்கிறார்கள். பணியாற்றியிருக்கிறார்கள். விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, பாடல்களையும் எழுதி, இசையும் அமைத்து படத்தை இயக்கியும் இருக்கிறார் செல்லதங்கையா.
5. ஓட்டம் ஆரம்பம்
முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஜெய். சிவசங்கர் இசையமைத்திருக்கிறார். வி.எஸ்.டி.ஜான் இயக்கியிருக்கிறார்.
6. வாழும் தெய்வம்
எஸ்கேபி பிலிம்ஸ் மற்றும் ஆர்.எஸ்.கே. ஸ்டூடியோ இணைந்து தயாரித்திருக்கும் படம் இது. பக்தி படமாம். ராதாரவி, நளினி, ரேகா, சத்யப்பிரியா, நிழல்கள் ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், ‘காதல்’ தண்டபாணி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கி்ன்றனர்.
7. Raid-2 என்ற ஆங்கிலப் படமும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸாகியுள்ளது.