full screen background image

ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ‘ஒன்றல்ல ஐந்து நிமிடம்’ படம்

ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ‘ஒன்றல்ல ஐந்து நிமிடம்’ படம்

ருத்ரன்ஷ் செல்லுலாய்ட்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பொம்மக் சிவா தயாரித்துள்ள புதிய படம் ‘ஒன்றல்ல ஐந்து நிமிடம்’.

இந்தப் படத்தை ஒரே ஷாட்டில் சுவாரசியமான முறையில் படமாக்கியிருக்கிறார்கள்.

குறைந்தபட்ச வசனங்களுடன் ஒரேயொரு கதாபாத்திரத்தை வைத்து, ஒரே ஷாட்டில் படம் எடுக்க, தயாரிப்பாளருக்கு தைரியமும், ஆர்வமும் தேவை. அப்படியொரு துணிச்சலான தயாரிப்பாளரான பொம்மக் சிவா இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

சிங்கிள் ஷாட்டில் ஒரே ஒரு கேரக்டரை வைத்து சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாக்கியிருக்கும் இந்தப் படத்தில் கதையின் நாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார்.

முழுப் படமும் ஒரே கேரக்டரில் ஒரே ஷாட்டில் ஓடுவதால், முழுப் படத்தையும் தன் ஸ்க்ரீன் பிரசன்ஸ் மற்றும் எக்ஸ்பிரஷன்கள் மூலம் பார்வையாளர்களை படத்தோடு ஒன்ற வைத்திருக்கிறார் ஹன்சிகா.

இந்தப் படத்தின் கால அளவு 1 மணி நேரம், 45 நிமிடங்களாகும்.

இந்தப் படத்தை மிகவும் கச்சிதமாக வடிவமைப்பதில் அனைத்துத் தொழில் நுட்ப கலைஞர்களும் அர்ப்பணிப்போடு பணியாற்றியுள்ளனர்.

இந்தப் படத்தில் புளூமேட் பயன்படுத்தவில்லை என்பது ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநரின் திறமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

ரீ-ரிக்கார்டிங்கிற்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இயக்குநர் கதை சொல்லும் போது, ​​அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு சிறப்பு கவனம் செலுத்தி பின்னணி இசையமைத்திருக்கிறார் சாம். படம் முழுக்க தனது இசையால் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சாம்.

படம் ஒரே ஷாட்டில் ஓடுவதால், ஒளிப்பதிவாளர் கிஷோர் பாய்தாபு, புதிய லைட்டிங் நுட்பத்தை இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். இயக்குநர் ராஜு துசா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

படத்தின் முதல் பிரதியை பார்த்த பிறகு எதிர்பார்த்ததைவிடவும் சிறந்த முறையில் படம் வந்துள்ளதால் ஒட்டு மொத்த குழுவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த ‘ஒன்றல்ல ஐந்து நிமிடம்’ படம் ஹன்சிகாவின் கேரியரில் சிறந்த படமாக இருக்கும். படத்தைப் பார்த்த பிறகு அனைவரும் அதை ஒப்புக் கொள்வார்கள்.

படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து முதல் பிரதி தயாராகிவிட்டது. படத்தின் டிரெயிலர் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து படம் தெலுங்கு மற்றும் பிற மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

Our Score