full screen background image

நதிகள் நனைவதில்லை-முன்னோட்டம்

நதிகள் நனைவதில்லை-முன்னோட்டம்

வைகுண்டா சினி பிலிம்ஸ் சார்பில் நாஞ்சில் பி.சி. அன்பழகன் தயாரித்து, இயக்கும் படம் ‘நதிகள் நனைவதில்லை’. கதாநாயகனாக பிரணவ், கதாநாயகிகளாக மோனிகா, ரிஷா நடித்துள்ளனர். மேலும் கல்யாணி நாயர், செந்தில், பாலாசிங், மதுரைமுத்து, டவுட் செந்தில், நெல்லை சிவா, பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் சீதாராமன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சௌந்தர்யன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை கார்த்திக்ராஜாவும், சண்டை காட்சிகளை தவசிராஜும், எடிட்டிங்கை சுரேஷ் அர்சும், தயாரிப்பு மேற்பார்வையை கே.எஸ்.இராமச்சந்திரனும் கவனித்து வருகின்றனர். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடந்தது. பின்னர் இறுதி கட்ட படப்பிடிப்பு கடந்த ஜனவரி 25-ம் தேதி தொடங்கி இரவு பகலாக நடந்து முடிந்தது. முழு படப்பிடிப்பும் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே நடந்து முடிந்துள்ளது. முழுக்க, முழுக்க கன்னியாகுமரி வட்டார பேச்சு மொழியே இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பழக்க வழக்கங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பிரபல பின்னணிப் பாடகி வசுந்தராதாஸ், சாய்சரண் பாடிய ‘சிட்டாங்கி சிட்டாங்கி’ என்ற பாடலின் படப்பிடிப்பு சிற்றாறு, முக்கூடல் ஆகிய இடங்களில் இரவு பகலாக நடந்தது. இதற்காக செயற்கை மழை உருவாக்கப்பட்டது. செயற்கை மழை ஏற்படுத்துவதற்காக 4 தீயணைப்பு வண்டிகள் கொண்டு வரப்பட்டன. இந்த பாடல் காட்சியில் மோனிகாவும், பிரணவும் தொடர்ந்து 3 நாட்கள் செயற்கை மழையில் நனைந்தபடி நடித்தனர்.

பெற்றோர்கள், தங்கள் கனவுகளைப் பிள்ளைகளின் தலையில் போட்டு உடைக்கக் கூடாது. அவரவர் கால்களில்தான் அவரவர் பயணங்களைத் தொடர வேண்டும். நம்பிக்கையில்லாத மனிதனுக்கு இதயமும் சுமைதான். குறுக்கு வழியின் துணை கொண்டு, மஹால்களைக் கட்டுவதை விட, நேர்வழியின் கரம் பற்றி குடிசையில் தூங்குவதே ஆத்ம செல்வமாகும். இந்த கருத்து குவியல்களின் நிழல் வடிவமே இந்த ‘நதிகள் நனைவதில்லை’.

Our Score