வரும் சனிக்கிழமையன்று சத்யம் தியேட்டரில் ரிலீஸ் செய்வதாக இருந்த ‘மான் கராத்தே’ படத்தின் இசை வெளியீட்டு விழா திடீரென்று மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ள செய்தியில்… “இப்படத்தின் இசை வெளியிட்டு உரிமையை வாங்கியுள்ள சோனி மியூஸிக் நிறுவனம் பாடல்களை ஒரே நேரத்தில் வானொலி, சிடிக்கள் மூலம் விற்பனை, ஐ போன், மற்றும் நோக்கியோ செல்போன்கள் என்று அனைத்து வடிவத்திலும் ஒரே நாளில் பாடல்களை ரிலீஸ் செய்யலாம் என்று யோசனை கூறியிருப்பதால் இதற்கு வசதியாக பாடல் வெளியீட்டு விழாவை மார்ச்-16-ம் தேதிக்கு தள்ளி வைத்திருப்பதாகத்” தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் மொத்தம் 5 பாடல்கள். ‘மாஞ்சா’ என்ற பாடலை அனிருத்தே பாடியிருக்கிறார். ‘டார்லிங் டம்பக்கு’ என்ற பாடலை பென்னி தயாளும், சுனிதி செளகானும் பாடியிருக்கின்றனர். ‘உன் விழிகளில்’ என்ற பாடலை அனிருத்தும், ஸ்ருதி ஹாசனும் பாடியிருக்கின்றனர். ‘ராயபுரம் பீட்டர்’ என்ற பாடலை சிவகார்த்திகேயனும், பரவை முனியம்மாவும் பாடியிருக்கின்றனர். ‘ஓபன் தி டாஸ்மாக்’ என்ற பாடலை தேவாவும், அனிருத்தும் பாடியிருக்கின்றனர்.
ஏற்கெனவே அனிருத்தின் ‘வேலை இல்லா பட்டதாரி’ படத்தின் பாடல்கள் இணையத்தில் டாப் டென் பாடல்கள் லிஸ்ட்டில் 8 இடங்களைப் பிடித்திருப்பதால் இந்தப் படத்தின் பாடல்களுக்கும் எதிர்பார்ப்பு மிகவும் கூடியிருக்கிறது.
மார்ச்-16-க்கு காத்திருப்போம்..!