full screen background image

எனக்குப் பிடிச்ச நடிகர் நானா படேகர்தான்.. – பாரதிராஜாவின் பெருமிதம்..!

எனக்குப் பிடிச்ச நடிகர் நானா படேகர்தான்.. – பாரதிராஜாவின் பெருமிதம்..!

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று தமிழுணர்வாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழின உணர்வாளர் பாரதிராஜாவுக்குப் பிடிச்ச நடிகர் பாலிவுட்டின் நானா படேகர்தானாம்..

“நான் பார்த்ததிலேயே எனக்குப் பிடிச்ச நடிகர் நானா படேகர்தான்.. அவன் நடிக்கிறதே தெரியாது.. ரொம்ப இயல்பா இருப்பான். அதுவே நடிப்பா தெரியும்.. நடிக்கிறதே தெரியாம நடிக்கிறதுதான் நடிப்பு. அந்த வரிசைல எனக்கு மிகவும் பிடிச்சவன் நானா படேகர்தான்.. அதுக்கப்புறம் இந்த்த் தம்பி சித்தார்த்.. இவர் நடிக்கிறதும் தெரியாது.. ஆனா நடிப்புன்னு தெரியாமலேயே நடிச்சுக்கிட்டிருக்காரு. இவருக்கும் எனது வாழ்த்துகள்..” என்றார்.

nanaapadekar-bharathi-1

2008-ம் ஆண்டு ‘பொம்மலாட்டம்’ படத்தை பாரதிராஜா இயக்கியபோது அதில் இயக்குநர் கேரக்டரில் நடித்தவர் நானா படேகர்தான். ஆனால் படத்தில் நடித்தபோது பாரதிராஜாவுக்கே இயக்கத்திலும், திரைக்கதையிலும், வசனத்திலும் நிறைய அட்வைஸ்களை சொன்னதால் இருவருக்கும் இடையில் பல முறை கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஷூட்டிங்கே தடைபட்டுப் போனது. கடைசியாக எப்படியோ பேசி, பஞ்சாயத்து செய்து படத்தை முடித்தார்கள்.

அப்போதே நானா படேகர் “நல்ல நடிகன்தான். ஆனா  ரொம்பத் திமிரா இருக்கான்..” என்று பேட்டியளித்திருந்தார் பாரதிராஜா. இப்போதும் நானா படேகர்தான் சிறந்த நடிகர் என்கிறார்.. ஆனால் நான் தமிழன்.. தமிழுக்காக வாழ்பவன்.. தமிழனை மிஞ்சி இங்கே எவனுமில்லை என்று வேறொரு மேடையிலும் பேசுகிறார்.. புரிந்து கொள்ளவே முடியவில்லை..

Our Score