full screen background image

மீண்டும் ஹீரோவாக பிரசாந்த்..!

மீண்டும் ஹீரோவாக பிரசாந்த்..!

சம வயதில் நடிக்க வந்து, இப்போதும் ஹி்ட்டடித்துக் கொண்டிருக்கும் அஜீத், விஜய் அளவுக்கெல்லாம் நடிகர் பிரசாந்த்தால் பிரகாசிக்க முடியாதது பெரும் வருத்தமே. இத்தனைக்கும் ஷங்கரின் ‘ஜீன்ஸ்’ அவருக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடி தந்தது..

இருந்தும் சில ஆண்டுகளாக சொந்த வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்டிருந்த சோகச் சம்பவங்கள் அவரை அரிதாரம் பூச விடாமல் செய்துவிட்டது.. கடைசியாக மலையூர் மம்பட்டியான் படத்தில் நடித்திருந்தார். அதுவும் வந்த வேகத்திலேயே திரும்பிவிட்டது..

இப்போது சொந்தப் படத்தையே துவக்கிவிட்டார். தலைப்பு ‘சாஹசம்’.  அப்பா தியாகராஜன்தான் தயாரிப்பாளர் பிரசாந்துக்கு ஜோடி இந்தி நடிகை சுபா புஞ்சா.. அப்பாவாக நாசர், அம்மாவாக துளசி.. தங்கையாக லிமா ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் தம்பி ராமையா, தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், கோட்டா சீனிவாசராவ், சோனு சூட் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சக்தி சரவணன் ஒளிப்பதிவு. சாஷி க்மெர் படத் தொகுப்பு செய்கிறார். திருவிக்ரம் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். மனோகர் வசனம்.. மேஜர் ரவியிடம் உதவி இயக்குநராக இருந்த அருண்மொழி வர்மன் படத்தை இயக்குகிறார்.

ஆக்சன், ரொமான்ஸ் கலந்த படமாம். இந்தப் படத்திற்காக பிரசாந்த் 20 கிலோ எடையை குறைத்திருக்கிறாராம். படத்தில் இடம் பெறும் ஒரு சண்டை காட்சியில் சீனாவின் ஹனாய் என்ற கிராமத்தில் எடுத்திருக்கிறார்களாம்..  வாழ்க்கையில் எளிய நிலைமையில் இருந்து மிகப் பெரிய ஆளாக வரத் துடிக்கும் ஒரு இளைஞன் பற்றிய கதையாம் இது.. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட பல நாடுகளில் நடைபெற உள்ளது.

Our Score