தரமான சின்ன படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு அதை போன்ற படங்களை தயாரிக்க ஊக்குவிக்கிறது. இந்த வரிசையில் தற்போது தயாராகி வரும் படம்தான் ‘கார்த்திகேயன்’.
Magnus Cine prime pvt ltd மற்றும் Navya visual media என்ற நிறுவனத்தின் சார்பில் B.V.ஸ்ரீநிவாஸ் மற்றும் மல்லிகார்ஜுன் தயாரிக்கும் ஹீரோவாக புதுமுகம் நிகில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சுப்ரமணியபுரம் சுவாதி நடிக்கிறார். தமிழ் திரையுலகின் படங்களில் தூணாக திகழும் ஜெயபிரகாஷ் மற்றும் கிஷோர் வலுவான கதாபாத்திரங்களில் நடிக்க… ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் மூலம் எல்லோருடைய பாராட்டுகளையும் அள்ளிய துளசி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சாகசமும், ஆபத்தும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை விளக்கும் படம்தான் இந்த ‘கார்த்திகேயன்’ என்கிறார் அறிமுக இயக்குநர் சந்து. கதைக்கேற்ப காட்சி அமைப்புடன் ரசிகர்களை நாற்காலியின் நுனிக்கு வரவழைக்கும் நவீன பாணியில் படத்தை இயக்கி உள்ளார். ஜி.கார்த்திக், அந்த தருணங்களை நேர்த்தியாக படம் பிடித்து உள்ளார். சேகர் சந்திரா காட்சி அமைப்புக்கேற்ப இசை அமைத்து உள்ளார்.
இறுதி கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த ஜனரஞ்சகமான படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது .
Artist
- · Nikhil (Hero)
- · Swati (Heroine)
- · Kishore
- · Jayaprakash
- · Tanikella Bharani Rao
- · Ramesh
- · Tulasi
- · Raja Ravindra
- · Prudhivi
- · Praveen
- · Satya
- · Jogi Naidu
Technicians
- · Cinematographer : G.Karthik
- · Editor : Karthika Srinivas
- · Music Director : Sekhar Chandra
- · Art Director : Sahi Suresh
- · Lyrics : Naa Muthu Kumar
- · Publicity Designer : Anil-Bhanu
- · C.G. : Eshwar (Srushti VFX)
- · Costume Designer : Harikesh
- · Still Photographer : B.Srinivas
- · Makeup chief : Srinu
- · Costumer : K.Ramakrishna
- · Additional Screenplay : D.Karthik Varma
- · Co-Director : Anu K Reddy
- · Dialogues : Bharati Shiva Shanmugam
- · Production Executive : A.Sampath
- · Co-Producer – P.Sai Satyanarayan & G.MALLIKARJUNA
- · Producer – B.V.SRINIVAS
- · Story-Screenplay- Direction – M.CHANDOO