full screen background image

“குடிகாரன் இல்லைன்னா சாமியார் வேடம்தான் தர்றாங்க”-மயில்சாமியின் ஆதங்கம்

“குடிகாரன் இல்லைன்னா சாமியார் வேடம்தான் தர்றாங்க”-மயில்சாமியின் ஆதங்கம்

குடிகாரன் இல்லாட்டி சாமியார் வேடத்தைத்தான் இயக்குநர்கள் என் தலைல கட்டுறாங்க” என்று நடிகர் மயில்சாமி ஆதங்கப்பட்டிருக்கிறார்.

மிர்ச்சி சிவா, நிக்கி கல்ரானி, மயில்சாமி, ரவி மரியா, ஆனந்த்ராஜ் நடிப்பில் இயக்குநர் ராம் பாலாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘இடியட்.’ இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்தான் நடிகர் மயில்சாமி இப்படி பேசியுள்ளார்.

நடிகர் மயில்சாமி பேசும்போது, “இந்தப் படத்தை வாழ்த்தும் அனைவருக்கும் என் நன்றி. முன்பெல்லாம் படம் 50 நாள், 100 நாள் ஓடியது என்று விழா வைப்பார்கள். அது இப்போது நடப்பதில்லை. ஆனால், சினிமா எந்தக் காலத்திலும் அழியாது. எல்லாவற்றையும் கடந்து நிற்கும். 

இந்தப் படத்தில் நான் நடித்திருந்தாலும் எனக்கு இந்தப் படத்தின் கதை தெரியாது. ராம்பாலா என்னை அழைத்து, ஒரு காட்சியை சொல்லி நடிக்க சொன்னார். நடித்து முடித்தவுடன் “நடிகன்யா நீ…” என என்னை பாராட்டினார்.

ஒரு காலத்தில் சினிமாவை விட்டே போக நினைத்தேன், ஆனால் சிவக்குமார் அண்ணன்தான் “இரு.. உனக்கென்று ஒரு கதாப்பாத்திரம் நிச்சயமாகக் கிடைக்கும்” என்றார். அப்படி கிடைத்ததுதான் குடிகாரன் கதாப்பாத்திரம். இப்போது எல்லா படங்களிலும் குடிகாரன் அல்லது சாமியார் கதாப்பாத்திரம்தான்  வருகிறது. அதுதான் என்னை இப்போதுவரையிலும் வாழ வைக்கிறது.

இயக்குநர் ராம்பாலா லொள்ளு சபா’வில் நிமிடத்திற்கு 10 பஞ்ச் அடித்து கலக்குபவர். லேட்டாக திரைக்கு வந்திருக்கிறார். ஆனால் கண்டிப்பாக தொடர்ந்து ஜெயிப்பார்.  இந்தப் படம் எல்லோருக்கும் பெயர் வாங்கி தரும். எனக்கும் பெயர் வாங்கி தரும்…” என்றார்.

Our Score