full screen background image

‘மன்னர் வகையறா’ படத்தின் ட்ரெய்லர் நவம்பர் 8-ம் தேதி ரிலீஸ்..!

‘மன்னர் வகையறா’ படத்தின் ட்ரெய்லர் நவம்பர் 8-ம் தேதி ரிலீஸ்..!

விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது.

அந்த அளவுக்கு விமலுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள கதையம்சம் கொண்ட இந்தப் படத்தை, காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குநர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார்.

விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். குறிப்பாக ரோபோ சங்கருடன் விமல் புதிதாக கூட்டணி அமைத்திருப்பது படத்தின் ஹைலைட்டாக இருக்கும்.

mannar vagaiyaraa movie stills

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் நவம்பர் 8-ம் தேதி இந்தப் படத்தின் ட்ரெய்லரை வெளியிட இருக்கிறார்கள். அதை தொடர்ந்து வரும் 2018 ஜனவரியில் பொங்கல் திருநாளன்று இந்தப் படத்தை ரிலீஸ் செய்யவும் முடிவு செய்துள்ளார்கள்.

வரப் போகின்ற புது வருடத்தில் வெளியாகும் ‘மன்னர் வகையறா’ விமலின் திரையுலக பயணத்திற்கு புதிய பாதை போட்டுத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை.  

Our Score