‘மங்கிஸ்தா கிங்கிஸ்தா’ என்ற பாடலை மெர்சலாக பாடிய டி.ராஜேந்தர்

‘மங்கிஸ்தா கிங்கிஸ்தா’ என்ற பாடலை மெர்சலாக பாடிய டி.ராஜேந்தர்

நீல்கிரிஸ் ட்ரீம் எண்ட்டெர்டெயின்மெண்ட்  நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ‘நீல்கிரிஸ்’ முருகன்  தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கூத்தன்.’  

இந்தப் படத்தில் புதுமுக நாயகனாக  நடித்திருக்கிறார் ராஜ்குமார். பாலாஜி இசையமைக்க, எழுதி இயக்கியிருக்கிறார் வெங்கி.A.L. 

ஒரு திரைப்படத்தில் டி.ராஜேந்தர் ஒரு பாடலை பாடினாலே அது சோசியல் மீடியாவில் தானாகவே வைரலாகிவிடும். இப்போதும் நிறைய தயாரிப்பாளர்கள் இதற்காகவே டி.ஆர். வீட்டிற்கு படையெடுத்து  வருகிறார்கள். ஆனால் டி.ஆரோ பாடலின் மெட்டும், வரிகளும் பிடித்திருந்தால் மட்டுமே க்ரீன் சிக்னல் காட்டுகிறார்.

W3A1535

இந்நிலையில் ‘கூத்தன்’ படக் குழு மற்றும் இசையமைப்பாளர் பாலாஜி இருவரும் டி.ஆரை. அணுகியபோது முதலில் ‘நோ’ சொன்ன டி.ராஜேந்தர், பாடலின் மெட்டை கேட்ட உடன் குஷியாகிவிட்டார்.

மேலும், இந்த பாடலை யார் பாடினாலும் சூப்பர் ஹிட் ஆகக் கூடிய பாடல் வரிகள்தான் ‘மங்கிஸ்தா கிங்கிஸ்தா’ என்றும் பாராட்டியிருக்கிறார். ஆனால், இசையமைப்பாளர் பாலாஜியோ, “சார் இந்தப் பாடலை நீங்கள்தான் பாட வேண்டுமென்று இசையமைத்திருக்கிறேன். வேறு யாரையும் வைத்து இந்த பாடலை ஓலிப்பதிவு செய்ய எனக்கு விருப்பமில்லை..” என்று கூறியவுடன், அதைக் கேட்டு நெகிழ்ந்து போன டி.ஆர்., “நானே இந்த பாடலை பாடுகிறேன்…” என்று ஒப்புக் கொண்டு மெர்சலாக பாடிக் கொடுத்திருக்கிறார்.

என்னதான் ஜாலியான பாடலாக இருந்தாலும் செண்டிமெண்ட்டாக ஒரு வரியை இதில் எழுதியிருந்தார்கள்.  "ஒண்ணும் இல்ல ரத்தத்தில.. சொந்தம்தான்டா மொத்தத்தில"  என்ற ரோகேஷ் எழுதிய வரியை பாடி முடித்தவுடன் கண்கலங்கிய டி.ஆர். “இந்த வரிகளை நான் பாடவில்லை.. நடித்திருக்கிறேன்..” என்று கூறியவுடன் நெகிழ்ந்து போனது ‘கூத்தன்’ படக் குழு.

இந்தப் பாடலை  மிகப் பெரிய பொருட் செலவில் பிரம்மாண்டமான அரங்கில் அசோக் ராஜாவின் நடன அமைப்பில் படமாக்க இருக்கிறார்கள்.