கவிஞர் வைரமுத்துவின் மகனான் பாடலாசிரியர் மதன் கார்க்கி இந்த 2014-ம் ஆண்டில் 33 படங்களில் 82 பாடல்களை எழுதியுள்ளார். இதில் 67 பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளன.
அவற்றில் “எனை மறுபடி மறுபடி(நண்பேன்டா), பச்சை வண்ணப் பூவே(வை ராஜா வை), இசை லீஸி(இசை), காதல் கஸாட்டா(கப்பல்), செல்ஃபி புள்ள(கத்தி), பூக்களே(ஐ), ஒருத்தி மேல(ஜீவா), ஏன் இங்கு வந்தான்(மீகாமன்), டக்கு டக்கு(சிகரம் தொடு), பேங் பேங்(அஞ்சான்), முன்னே என் முன்னே(சதுரங்க வேட்டை), யாரோ யார் அவள்(அரிமா நம்பி), வாசம் மோக்கா(வாலு), ஹனியே(ஆஹா கல்யாணம்), நெகிழி(நிமிர்ந்து நில்), மாஞ்சா(மான்கராத்தே), நீ என்ன பெரிய அப்பாடக்கரா(என்னமோ ஏதோ), சரிதானா… (அமரகாவியம்), என் நெஞ்சில்(நாய்கள் ஜாக்கிரதை), மோனோ கேஸலீனா(லிங்கா)”, போன்ற பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி உள்ளன.
வழக்கமாக நா.முத்துகுமார்தான் வருடந்தோறும் அதிகமான பாடல்களை எழுதுவார். இப்போது அவருக்கு போட்டியாக மதன் கார்க்கியும் வந்திருக்கிறார். இந்தப் போட்டி சந்தோஷமானதுதான்.. இது தவிர நான்கு படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார் கார்க்கி.
இது குறித்து பேசிய மதன் கார்க்கி, “திரையுலகில் ஓர் எழுத்தாளனாக நான் அடியெடுத்து வைத்து ஐந்தாண்டுகள் நிறைவுறுகிறது. என் இந்தப் பயணம் தொடங்கிய நான் முதல் இன்றுவரை பத்திரிகையாளர்கள் கொடுத்து வரும் ஊக்கத்திற்கும், விமர்சனங்களுக்கும் நன்றி. எனக்கு சூழலும், சுதந்திரமும் தந்த என் இயக்குனர்களுக்கும், என் வரிகளுக்கு உருவம் தந்த இசை அமைப்பாளர்களுக்கும், பாடகர்களுக்கும், வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றி. இன்னும் அழகான, தரமான பாடல்களோடு வரும் ஆண்டும் அமையும் என்று நம்புகிறேன்..” என்றார்.
கவிப்பேரரசுவுடன் போட்டி போடும் அளவுக்கு அவரது மகனும் வளர்ந்திருப்பது பாராட்டுக்குரியது..!