பிரபல சண்டை இயக்குநர் இயக்கும் ‘லாக் டவுன்’ திரைப்படம்

பிரபல சண்டை இயக்குநர் இயக்கும் ‘லாக் டவுன்’ திரைப்படம்

அங்கிதா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S.முரளி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘லாக் டவுன்’.

இப்படத்தில் நாயகனாக அமித் ஜாலி அறிமுகமாக, நாயகியாக கீதா என்ற சஹானா அறிமுகமாகிறார்.

மேலும் இப்படத்தில் சுந்தரம் மாஸ்டர், பிரகாஷ் ராஜ், நேஹா சக்சேனா, துளசி, ‘மொட்டை’ ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர்.

இசை – ஜாசி கிஃப்ட், ஒளிப்பதிவு – PK.H. தாஸ், படத் தொகுப்பு –  சுரேஷ் அர்ஸ், சண்டை இயக்கம் – ஜாலி பாஸ்டியன், ரவி வர்மா, நடன  இயக்கம் – சின்னி பிரகாஷ், மதன் ஹரணி, ஸ்டில்ஸ் – சுரேஷ், உடை அலங்காரம் – நேஹா சக்சேனா, ஒப்பனை – பைஜூ பலராமபுரம், மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு, இணை இயக்குநர் – பாலா பாண்டியன், எழுத்து, இயக்கம் – ஜாலி பாஸ்டியன்.

இந்தப் படத்தை இயக்கும் இயக்குநரான ஜாலி பாஸ்டியன் கன்னட சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற சண்டை இயக்குநர். தமிழில் ‘தம்’, ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’, ‘அசுர வம்சம்’, மலையாளத்தில் ‘பெங்களூர் டேய்ஸ்’, ‘அங்கமாலி டைரீஸ்’, ‘டிரைவிங் லைசென்ஸ்’, ‘மாஸ்டர் பீஸ்’ உட்பட 400-க்கும் அதிகமான படங்களில் சண்டை இயக்குநராகப் பணியாற்றியவர். தற்போது கன்னட திரையுலக சண்டை இயக்குநர்கள் சங்கத்தில் தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் இன்று காலை பூஜையுடன் துவங்கியது.

இந்தப் பூஜை நிகழ்வில் மூத்த நடன இயக்குநரான சுந்தரம் மாஸ்டரும் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்.

 
Our Score