நடிகர் விக்ரம் நடிக்கும் 60-வது படத்தின் பெயர் ‘மகான்’

நடிகர் விக்ரம் நடிக்கும் 60-வது படத்தின் பெயர் ‘மகான்’

அப்பாவான நடிகர் விக்ரமும், மகன் துருவ் விக்ரமும் முதல்முறையாக நடித்திருக்கும் புதிய படத்தின் பெயரை ஒரு வழியாக இப்போது அறிவித்திருக்கிறார்கள். படத்தின் பெயர் ‘மகான்’.

இப்போதுவரையிலும் இத்திரைப்படம் ‘சீயான்-60’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.

இந்தப் படத்தில் சிம்ரன், வாணி போஜன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த ‘மகான்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன.

இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டரை இன்றைக்கு வெளியிட்டு படத்தை பெயரை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

விக்ரமின் ‘மகான்’..! பொருத்தமாகத்தான் இருக்கிறது..!

Our Score