full screen background image

‘சார்பட்டா’வின் வெற்றியால் ஆர்யாவின் ‘சந்தனத் தேவன்’ தொடங்குமா..?

‘சார்பட்டா’வின் வெற்றியால் ஆர்யாவின் ‘சந்தனத் தேவன்’ தொடங்குமா..?

சார்பட்டா பரம்பரை’ படத்தின் வெற்றியினால் ஆர்யா நடிப்பில் உருவாகி பாதியில் நிற்கும் ‘சந்தனத்தேவன்’ படம் மீண்டும் துவங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதியன்று இந்த ‘சந்தனத்தேவன்’ படம் துவங்கியது. இயக்குநர் அமீர் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தில் ஆர்யா, ஆர்யாவின் சகோதரரான சத்யா மற்றும் அமீர் மூவருமே முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இது ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகத் துவங்கிய ஒரு வரலாற்றுத் திரைப்படம். 2017-ல் நடைபெற்ற ‘மெரீனா புரட்சி’தான் இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்தது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு 35 நாட்கள் நடந்த பின்பு திடீரென்று பைனான்ஸ் நெருக்கடியால் நிறுத்தப்பட்டது. பின்பு தொடரப்படவே இல்லை.

பட்ஜெட் பெரிதானது என்பதாலும் ஆர்யாவுக்கு அப்போதைய காலக்கட்டத்தில் பெரிய மார்க்கெட் இல்லை என்பதாலும் விநியோகஸ்தர்களும், பைனானாஸியர்களும் இந்தப் படத்தில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் படம் அன்றிலிருந்து இப்போதுவரையிலும் அப்படியேதான் கிடப்பில் இருக்கிறது.

இப்போது ‘சார்பட்டா பரம்பரை’யின் வெற்றியினால் இந்த ‘சந்தனத்தேவன்’ படத்தை மீண்டும் துவக்கலாமா என்று இயக்குநர் அமீர் திட்டமிட்டு வருகிறாராம். இப்போது ஆர்யாவின் மார்க்கெட் கொஞ்சம் ஸ்டெடியாக இருப்பதால் அதற்கேற்றவாறு பட்ஜெட் போட்டால் பைனான்ஸ் கிடைக்க வாய்ப்புண்டு என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் இயக்குநர் அமீர்.

Our Score