14-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 12 தமிழ்த் திரைப்படங்கள் போட்டியிடுகின்றன..!

14-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 12 தமிழ்த் திரைப்படங்கள் போட்டியிடுகின்றன..!

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில், தென்னிந்திய நடிகர் சங்கம், இயக்குநர்கள் சங்கம் மற்றும் அனைத்து சினிமா சங்கங்களின் ஆதரவுடனும் இன்டோ – சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 14-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, வரும்  டிசம்பர் 15 வியாழக்கிழமை முதல் 22 வெள்ளிக்கிழமைவரையிலும் நடைபெறவுள்ளது.

இந்த திரைப்பட விழாவில் சிறந்த தமிழ்த் திரைப்படங்களுக்கான போட்டி பிரிவில் பங்கேற்க 12 தமிழ்த் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன.

‘24’, ‘அம்மா கணக்கு’, ‘தேவி’, ‘தர்மதுரை’, ‘இறைவி’, ‘ஜோக்கர்’, ‘கர்மா’, ‘நானும் ரெளடிதான்’, ‘பசங்க-2’, ‘ரூபாய்’, ‘சில சமயங்களில்’, ‘உறியடி’ ஆகியவையே அந்த 12 படங்களாகும்..!