செல்போனால் விளையும் பிரச்சினைகள்தான் ‘பார்க்க தோணுதே’ திரைப்படம்..!

செல்போனால் விளையும் பிரச்சினைகள்தான் ‘பார்க்க தோணுதே’ திரைப்படம்..!

வாசவி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வி.கே.மாதவன் தயாரித்துள்ள படம் ‘பார்க்க தோணுதே.’

இந்தப் படத்தில் அர்ஷா நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சாரா அறிமுகமாகிறார். மற்றும் அமர், பாண்டு, உசிலம்பட்டி கார்த்தி, 'வெளுத்துக்கட்டு' அப்பு, பாத்திமா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு   -  ஜி.ரமேஷ், இசை – மணீஷ், நடனம் – ஸ்ரீகருண், படத் தொகுப்பு – லெனின் சந்திரசேகர், சண்டை பயிற்சி – திரில்லர் மகேஷ், தயாரிப்பு – வி.கே.மாதவன், இணை தயாரிப்பு – அனிதா மாதவன், எழுத்து, இயக்கம் – ஜெய் செந்தில்குமார்.

படம் பற்றி இயக்குநர் ஜெய் செந்தில்குமார் பேசுகையில், “கிராமத்து பின்னணியில் நடக்கும் திரில்லர் கதை இது. இதை காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறோம். ஒரு நாள் நாயகனுக்கு எதிர்பாராதவிதமாக ஒரு செல்போன் கிடைகிறது. அந்த செல்போனை வீட்டிற்கு எடுத்து வருகிறான். அந்த செல்போனால் நாயகனுக்கு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அந்தப் பிரச்சினையில் இருந்து அவன் எப்படி தன்னை காப்பாற்றிக் கொள்கிறான் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், ஏற்காடு போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ளது..” என்றார்.