இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு வருடா வருடம் சென்னையில் நடத்தும் சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 12-ம் தேதி முதல் 19-ம் தேதிவரையிலும் நடைபெறவிருக்கிறது. இது இவர்கள் நடத்தும் 17-வது தொடர் விழாவாகும்.
உலகத் திரைப்படங்கள் தேவி, தேவிபாலா, அண்ணா திரையரங்கம், கேசினோ, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், தாகூர் பிலிம் சென்டர் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளன.
இந்தாண்டுக்கான திரைப்பட விழாவின் துவக்க விழா வரும் டிசம்பர் 12-ம் தேதி மாலை 6 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
உலகத் திரைப்பட விழாவின் நிறைவு விழா வரும் டிசம்பர் 19-ம் தேதியன்று மாலை 06.15 மணியளவில் தேவி திரையரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்த 17-வது சென்னை சர்வதேச திரைப்படவிழாவின் சிறப்பம்சங்கள் :
பங்கேற்கும் நாடுகள்: 55
பங்கேற்கும் திரைப்படங்கள்: 130
விருந்தினர்கள்: பல்வேறு நாடுகளின் வெளிநாட்டு தூதர்கள் தில்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னையில் இருந்து வருகை தர இருக்கிறார்கள்
வருகை எதிர்பார்க்கப்படும் திரைப்பட இயக்குநர்கள்:
டாக்டர். பாலாஸ்வர்கா, உதவி பேராசிரியர், ஹங்கேரி
ஸ்ரீமதி. ஷில்பா, இயக்குனர், சிங்கப்பூர்
திரு. பாரதிராஜா நடராஜா, தயாரிப்பாளர், இயக்குனர், மலேசியா
திரு. ஒய். ஸ்ரீநிவாஸ், கன்னட திரைப்பட இயக்குனர், மற்றும் குழுவினர்
திரு. சேத்தன் சிங், இந்தி திரைப்பட இயக்குனர்
திரு. கே எல். பிரசாத், தெலுங்கு திரைப்பட இயக்குனர், மற்றும் குழுவினர்
ஸ்ரீமதி. ரஜ்னிபாசுமடரி, அசாமிய திரைப்பட இயக்குனர்
இவ்விழாவின் முதல் படம் : ‘பால்மே தி’ஓர்’ கான்ஸ் திரைப்பட விழாவின் வெற்றி திரைப்படம் மற்றும் ‘தி பாராசைட்’ – கொரிய திரைப்படம்
இவ்விழாவின் நிறைவுப் படம் : கண்டர்மான் – ஜேர்மனி
பிற விருது பெற்ற திரைப் படங்கள்:
வெற்றிப் படங்கள்: கான்ஸ் திரைப்பட விழா
போர்ட்ரைட் ஆப் ஏ லேடி ஆன் பயர் – ஃபிரான்ஸ்
பீன் போல் – ரஷ்யா
வெற்றிப் படங்கள்: பெர்லின் சர்வதேச திரைப்பட விழா
பிரன்ஹாஸ் – இத்தாலி
ஸோ லாங், மை சன் – சீனா
சிஸ்டம் கிராஷர் – ஜெர்மனி
போயன்சி – ஆஸ்திரேலியா
தி லெஜன்ட் ஆப் ரீட்டா – ஜெர்மனி
டியர் எம்மா, ஸ்வீட் பூபே – ஹங்கேரி
வெற்றிப் படங்கள்: ஈரான் எப்.ஏ.ஜே.ஆர். திரைப்பட விழா
ஜஸ்ட் 6.2 – ஈரான்
தி வார்டன் – ஈரான்
ஐரினா – பல்கேரியா
வெற்றிப் படங்கள்: வெனிஸ் திரைப்பட விழா
ஏ சன் – துனிசியா
தி மேன் ஹூ சர்ப்ரைஸ்ட் எவ்ரிஒன் – எஸ்டோனியா
ஸோல் – போலந்து
வெற்றிப் படங்கள்: டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழா
ஸோல் – போலந்து
வெற்றிப் படங்கள்: கார்லோவி வேரி சர்வதேச திரைப்பட விழா, செக் குடியரசு
பாத்ஸ் இன் தி நைட் – ஜெர்மனி
கான்ஸ் திரைப்பட விழா – நாமினிகள்:
நீனா வூ – தைவான் – சம்மர் ஒப் சாங்ஷா (சீனா), சிக், சிக், சிக் (பிரேசில்),கோல்டி (அமெரிக்கா), தலேமஸ் (துனிசியா), சாங் விதௌட் ஏ நேம் (பெரு), தி அன்னோன் செயின்ட் (கத்தார், மொராக்கோ), சிபில் (பெல்ஜியம்), ஹோம்வர்ட் (உக்ரைன்), ஓ மெர்சி! (பிரான்ஸ்)
பெர்லின் சர்வதேச திரைப்பட விழா – நாமினிகள் :
தி கிரவுண்ட் பிநீத் மை ஃபீட் (ஜெர்மனி), ஹோலி பீஸ்ட்ஸ் (டொமினிக்க குடியரசு), தி டே ஆஃப்டர் ஐ ஏம் கான் (இஸ்ரேல்), ஈஸி லவ் (ஜெர்மனி), டிவைன் லவ் (உருகுவே)
வெனிஸ் திரைப்பட விழா – நாமினிகள் :
ஜஸ்ட் 6.5 (ஈரான்), ஆடம் அண்ட் ஈவ்லின் (ஜெர்மனி), ஸ்ட்ரிப்ட் (இஸ்ரேல்)
பூஸான் சர்வதேச திரைப்பட விழா – நாமினிகள் :
தி மேன் ஹூ சர்ப்ரைஸ்ட் எவ்ரிஒன் – எஸ்டோனியா
தேசிய விருதுகளை வென்ற இந்தியன் பனோரமாவின் திரைப்படங்கள்:
அமோரி – இயக்கம்: திரு. தினேஷ் பி போன்ஸ்லே (கொங்கனி)
ஹெல்லாரோ – இயக்கம்: அபிஷேக் ஷா (குஜராத்தி)
சமகால ஜெர்மானிய திரைப்படங்கள்: 6 படங்கள்
(உதவி: கோஎதே இன்ஸ்டிட்யூட், சென்னை)
பெர்லின் சுவர் வீழ்ந்து 30 ஆண்டுகள்: 5 படங்கள்
(உதவி: கோஎதே இன்ஸ்டிட்யூட், சென்னை)
சிறப்பு கவனம் பெரும் நாடுகள்:
ஹங்கேரி – 4 படங்கள்
(உதவி: ஹங்கேரியன் தகவல் மற்றும் கலாச்சார மையம், புது தில்லி)
தாய்லாந்து – 2 படங்கள்
(உதவி: ராயல் தாய் தூதரக தலைமை, சென்னை)
தைவான் – 2 படங்கள்
(உதவி: தாய்பே பொருளாதார மற்றும் கலாச்சார மையம், சென்னை)
ஆஸ்திரேலிய பார்வை: 2 படங்கள்
(உதவி: ஆஸ்திரேலிய தூதரகம், சென்னை)
சமகால திரைப்படங்கள்:
ஈரான் – 5 படங்கள்
இந்தியா – 13 படங்கள்
போட்டி திரைப்படங்கள் – தமிழ்: 12 படங்கள்
தமிழ் திரைப்படங்கள் போட்டி தேர்வு பிரிவில், ஐ.சி.ஏ.எப். ஊடகங்களின் மூலம் அறிவித்திருந்தபடி, திரைப்படங்களை சமர்ப்பிக்க அக்டோபர் 07 முதல் நவம்பர் 10-ம் தேதிவரையிலும் கால நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, சமர்ப்பிக்கப்பட்ட 19 திரைப்படங்களில், 12 படங்கள் முன்னோட்டக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
‘அடுத்த சாட்டை’, ‘அசுரன்’, ‘பக்ரீத்’, ‘ஹவுஸ் ஓனர்’, ‘ஜீவி’, ‘கனா’, ‘மெய்’, ‘ஒத்த செருப்பு’ சைஸ்-7’, ‘பிழை’, ‘சீதக்காதி’, ‘சில்லு கருப்பட்டி’, ‘தோழர் வெங்கடேசன்’ ஆகிய 12 தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் முதன் முறையாக:
அசர்பெஜான் நாட்டின் திரைப்படம் – தி பிரா
நியூசிலாந்து நாட்டின் திரைப்படம் – தி ஸ்ட்ரே – 8 வெற்றிகள், 15 நாமினேஷன்ஸ்
அல்பேனிய நாட்டின் திரைப்படம் – ஹோலி ப்ளூம், 12 வெற்றிகள், 3 நாமினேஷன்ஸ்
கத்தார் / மொராக்கோ நாட்டின் திரைப்படம் – தி அன்னோன் செயின்ட் – கான்ஸ் திரைப்படவிழா நாமினி
சூடான் நாட்டின் திரைப்படம் – ஹார்ட்ஸ் அண்ட் போனஸ்
இந்தியாவின் தேசிய விருது பெற்ற அமோரி – கொங்கனி
இந்தியாவின் தேசிய விருது பெற்ற ஹெல்லாரோ – குஜராத்தி
இந்திய நாட்டின் திரைப்படம் – JWLWI – தி சீட் – போடோ / அசாமி
இந்திய நாட்டின் திரைப்படம் – IEWDUH – கரோ / காசி
இந்திய நாட்டின் திரைப்படம் – நேதாஜி – இருளர்களின் மொழியில்
பிரதிநிதிகள் பதிவு :
நேரடியாக தேவி சினிப்ளக்ஸ் – தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை
இணைய வழி பதிவுக்கு: www.icaf.in / www.chennaifilmfest.com / www.bookmyshow.com
திரைப்படத் துறையின் முன்னணி பிரபலங்களுடன் ஊடாடும் அமர்வுகளும் உண்டு.